”பொன்னியின் செல்வன்” படத்துல சிம்ரன் நடிக்க விரும்பிய ரோல் எது தெரியுமா?.. அடடே மிஸ் ஆகிடுச்சே!
சென்னை: ரஜினிகாந்த் நடித்த ”சந்திரமுகி” படத்திலேயே சந்திரமுகியாக முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன் தான் என தகவல்கள் வெளியாகின. சிம்ரன் நடிக்க முடியாத நிலையில் தான் ஜோதிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அந்த படம் மாறியது.
இந்நிலையில், ”பொன்னியின் செல்வன்” படத்தில் தனக்கு பொருந்தக் கூடிய கதாபாத்திரம் எது என்கிற கேள்விக்கு நடிகை சிம்ரன் அளித்துள்ள பதில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்களுடன் உரையாடிய சிம்ரன்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகி உள்ள நடிகை சிம்ரன் இன்று ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பளிச்சென பதில் அளித்து மீண்டும் ரசிகர்கள் மனங்களை கவர்ந்தார். நடிகை ஜோதிகா இந்த வயதிலும் பாலிவுட், மலையாளம் என கலக்கி வரும் நிலையில், சிம்ரன் மகான் படத்திற்கு பிறகு ஏன் சைலன்ட் ஆகிவிட்டார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடனத்தில் ஆர்வம்: நடிகை சிம்ரன் சமீப காலமாக ரோட்டில் இறங்கி நடனம் ஆடி வரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், பாலா இயக்கத்தில் சியான் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான ”பிதாமகன்” படத்தில் அவர் ஆடிய “தக தக தகவென ஆடிவா” பாடலுக்கு அட்டகாசமான நடனத்தை போட்டிருந்தார்.
துள்ளாத மனமும் துள்ளும்: நீங்க நடிச்சதிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச கதாபாத்திரம் எது என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிரடியாக தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த ”துள்ளாத மனம் துள்ளும்” ருக்கு கதாபாத்திரம் தான் எனக் கூறியுள்ளார். மேலும், பம்மல் கே சம்மந்தம், அரசு உள்ளிட்ட படங்களில் எனக்கு கிடைத்த கதாபாத்திரங்களும் ஃபேவரைட்டான ஒன்று தான் என பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் பற்றி: ரியல் லைஃப் ஹீரோ விஜயகாந்த் ஆனால், சீக்கிரமே மறைந்து விட்டார் என கேப்டன் குறித்த கேள்விக்கும் சிம்ரன் பதில் அளித்துள்ளார். அதில், ஒரு ரசிகர் பொன்னியின் செல்வன் படம் குறித்த கேள்விக்கும் சிம்ரன் பதில் அளித்துள்ளார்.
பொன்னியின் செல்வனில் எந்த ரோல்: "கோவில்பட்டி வீரலட்சுமி" படத்தில் நடிப்பது ரொம்பவே சவாலாக இருந்தது என சொன்ன சிம்ரன் "பொன்னியின் செல்வன்" குறித்த கேள்விக்கு நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் ஆசைப்பட்டேன், அதுதான் எனக்கு தெரிந்து அந்த கதையில் ரொம்பவே சவாலான கதாபாத்திரம் என சிம்ரன் பதிலளித்துள்ளார். மேலும், சீக்கிரமே பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு என்றும் அந்தகன் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











