டப்பா ரோலில் நடிப்பதை விட.. சிம்ரனை கடுப்பாக்கிய நடிகை.. பரபரப்பான வைரல் வீடியோ

சென்னை: தமிழ் திரையுலகில் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகை சிம்ரன். இவருடைய நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் நடனம் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரசிகர்களும் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர். மேலும், நடிகை சிம்ரன் அழகில் மட்டும் அல்ல பேச்சிலும், நடனத்திலும் அன்றும் இன்றும் என்றும் இளமையுடன் இருப்பதாக கூறி ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். இந்நிலையில், நடிகை ஒருவர் சிம்ரனை கடுமையாக விமர்சித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சிம்ரன் என்ன சொல்லியிருக்காங்க என்பதை இதில் காணலாம்.

90களில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு மொழிகளிலும் இவர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவரது இடுப்பழகு டான்ஸை பார்த்து வியக்காதவர்கள் இல்லை. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில், அஜித் அவரை கலாய்க்கும் விதமாக இடுப்பை பத்திரமாக பார்த்துக்கோங்க என்பார். பின்பு இல்லை உடம்பை பார்த்துக்கோ என சொல்வார் இந்த காட்சிக்கு விசில் சத்தம் பறந்தன.
சுல்தானா பாடலும் இப்படத்தில் இடம்பிடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

Simran says she would rather play an auny role than a dabba role

டூரிஸ்ட் பேமிலி: இதைத்தொடரந்து சிம்ரன் சசிகுமாருடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்ரன் திரையில் காமெடி கலந்த சீரியஸா டிராமா படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார், சிம்ரன் மேடம் எனக்கு ஜோடி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களது நடனத்தை பார்த்து வியந்திருக்கிறேன். வித்தியாசமான படங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். அவர் மாதிரி ஒரு அழகை பார்த்தது இல்லை என்றதும் சிம்ரன் வெட்கப்பட்டார்.

யார் அந்த நடிகை?: இந்நிலையில் விருது விழாவில் கலந்துகொண்ட சிம்ரன் சக நடிகைகள் நம்மை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும்போது பாராட்டுவது உண்டு என தெரிவித்தார். அப்போது அந்த நடிகை கூறிய வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை என கூறினார். பின்னர பேசிய சிம்ரன், ஒரு படம் பார்த்தேன் பிடித்திருந்தது. அந்த ரோலில் உங்களை பார்த்தது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என அவருக்கு மெசேஜ் செய்தேன். ஆனால், அவர் Aunty கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது'என எனக்கு மெசேஜ் செய்தார். அவரிடம் இருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன சொல்கிறேனோ அது என்னுடைய கருத்தாக இருக்கும். ஆனால், நான் அனுப்பிய மெசேஜிற்கு நல்ல பதில் வரும் என்று எதிர்பார்த்தது என் தவறு தான். டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான Aunty ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று சிம்ரன் கூறி முடித்தார்.

Simran says she would rather play an auny role than a dabba role

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்ரன் கூறிய நடிகை யாராக இருக்கும். யார் அந்த நடிகை என நெட்டிசன்கள் தேட தொடங்கியுள்ளனர். மேலும், இவரா அல்லது அவரா என மேன்மேலும் விவாதத்தை கிளப்பி வருகிறார்கள். உண்மையில் யாராக இருந்தாலும் இப்படி சிம்ரனை கடுப்பேத்தியிருக்க கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X