சிம்ரனின் இடை அழகு ரகசியம் என்ன தெரியுமா?.. தினமும் அப்படி செய்யணுமாம்.. அவரே சொன்ன சீக்ரெட்

சென்னை: சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். அவர் பீக்கில் இருந்தபோது நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். பப்லியாக இருந்தால்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை கொண்டாடுவார்கள் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கி ஸ்லிம்மாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவரலாம் என்ற புது விஷயத்தை கோலிவுட்டுக்கு சொல்லிகொடுத்தவர் சிம்ரன். இந்த சூழலில் அவர் சொன்ன சீக்ரெட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஹிந்தியில் 1996ஆம் ஆண்டு அமிதாப்பின் கம்பெனி தயாரித்த தெரெ மெரே சாப்னே படத்தில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் சிம்ரன். அவருக்கு மிகச்சிறந்த பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்னல் ஒரு கோடி பாடலில் சிம்ரனின் நடனத்தையும், அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.

Simran Andhagan Prashanth

ரூல் செய்த சிம்ரன்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் கமிட்டான படங்கள் அனைத்துமே ஒன்று மெகா ஹிட் இல்லை சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. இதனால் ஒரு நாயகியின் சகாப்தம் தமிழ் சினிமாவில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.

சிறந்த நடிகை: சிம்ரனை பொறுத்தவரை அவரது பலமே அவரது அழகும், திறமையும். அவரிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பவர். ஒருபக்கம் வாலியில் கிளாமர் ரோலும் செய்தார், மறுபக்கம் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கண் தெரியாத ருக்குவாக ரசிகர்களை கண் கலங்கவும் செய்தார். அதனாலேயே அவரது கொடி தமிழ் சினிமாவில் உச்சம் பறந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்படி ஒரு ஹீரோயின் கிடைப்பது அபூர்வம் என்றே கோலிவுட் கருதியது.

ரீ என்ட்ரி: தொடர்ந்து பீக்கில் இருந்த அவர் தனது பால்ய கால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு சினிமாவிலிருந்து விலகிய அவர் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி, ஐந்தாம் படை, வாரணம் ஆயிரம், பேட்ட, ராக்கெட்ரி, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அதேசமயம் பிரசாந்த்துடன் அவர் நடித்திருக்கும் அந்தகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இடை அழகின் ரகசியம்: சிம்ரன் என்றாலே அவரது நடனமும், இடையும்தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். அவருடன் நடித்த நடிகைகளேகூட சிம்ரனின் இடையை ரசித்த வரலாறு உண்டு. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிம்ரனிடம் அவரது இடை அழகின் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இடையை தினமும் 150 முறை ட்விஸ்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். தினமும் 150 முறை என மூன்று செட்டாக செய்தால் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X