For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்ரனின் கணவர் இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. இன்னைக்கு அவங்க வீட்ல டபுள் கொண்டாட்டம்!

  |

  சென்னை: நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கணவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் செல்ஃபியை பகிர்ந்து கொண்டாட்ட மன நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

  Recommended Video

  Simran First Movie | Simbran Unknown Facts | Simbran Family *Celebrity | Filmibeat Tamil

  90ஸ் கிட்ஸ்க்கு சிம்ரன் தான் கனவுக் கன்னியே. ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என ஏகப்பட்ட ஹிட் படங்களில் அவர் நடிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

  மீண்டும் தனது இன்னிங்ஸை சீமராஜா படத்தின் மூலம் தொடங்கிய சிம்ரன் ரஜினியுடன் முதன்முறையாக பேட்டை படத்தில் நடித்து தனது கனவை நிஜமாக்கினார்.

   உண்மையான லக்கிமேன் யார் தெரியுமா ? ... 777சார்லி நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி சிறப்பு பேட்டி உண்மையான லக்கிமேன் யார் தெரியுமா ? ... 777சார்லி நடிகை சங்கீதா ஸ்ரீங்கேரி சிறப்பு பேட்டி

  என்றும் சிம்ரன்

  என்றும் சிம்ரன்

  பிரபுதேவா, அப்பாஸ் நடித்த விஐபி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். அடுத்ததாக நடிகர் விஜய்யின் ஒன்ஸ்மோர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து நேருக்கு நேர், பூச்சூடுவா, அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டாள், பஞ்ச தந்திரம், நியூ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து என்றுமே ரசிகர்கள் மனதில் நீங்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறார் சிம்ரன்.

  செகண்ட் இன்னிங்ஸ்

  செகண்ட் இன்னிங்ஸ்

  வாரணம் ஆயிரம் படத்திலேயே அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்ரன். சீமராஜா, பேட்ட, பாவக் கதைகள், மகான் என தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார். விரைவில் வெளியாக உள்ள பிரசாந்தின் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

  பால்ய நண்பருடன் திருமணம்

  பால்ய நண்பருடன் திருமணம்

  மும்பையில் பஞ்சாபி பெற்றோருக்கு மகளாக பிறந்த சிம்ரன் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தனது பால்ய நண்பர் தீபக் பாகாவுடன் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சிறிது காலம் நடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்த சிம்ரன் மீண்டும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

  ஒரே ஒரு படம்

  ஒரே ஒரு படம்

  நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகாவும் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான ஓடு ராஜா ஓடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகு நடிப்பில் அவர் கவனம் செலுத்தவில்லை. சிம்ரன் - தீபக் தம்பதியினருக்கு ஆதீப் ஓடோ மற்றும் ஆதித் வீர் என இரு மகன்கள் உள்ளனர்.

  கணவருடன் செல்ஃபி

  கணவருடன் செல்ஃபி

  நடிகை சிம்ரன் பெரும்பாலும் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதில்லை. இந்நிலையில், கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

  டபுள் கொண்டாட்டம்

  டபுள் கொண்டாட்டம்

  மேலும், தனது கணவர் தீபக்கிற்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தனது மகன்களின் சார்பாக சொல்லி உள்ளார் நடிகை சிம்ரன். கணவரின் பிறந்தநாள் மற்றும் தந்தையர் தினம் என டபுள் கொண்டாட்டம் இன்று அவரது வீட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. விரைவில் மாதவன் உடன் சிம்ரன் நடித்த ராக்கெட்டரி வெளியாக உள்ளது. மேலும், விக்ரம் உடன் நடித்த துருவ நட்சத்திரம், ஆர்யாவுடன் நடித்து வரும் கேப்டன் என இப்போதும் பிசியான நடிகையாகவே உள்ளார் சிம்ரன்.

  English summary
  Actress Simran shares her lovely husband Deepak Bagga photo and send her beautiful birthday wishes to him and also says father's day wishes also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X