விஜய்யின் அரசியல் என்ட்ரி.. அவரது ஃபேவரைட் ஜோடி சிம்ரன் என்ன சொல்லிருக்காங்க பாருங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் அப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவருடன் இணைந்து பணியாற்றிய சிம்ரன் தனது கருத்தினை முன்வைத்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த விஜய் இப்போது ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் அந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகிவருகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்துவருகிறார். அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
தளபதி டூ தலைவர் விஜய்: அதேசமயம் அவர்களுக்கு இன்னொரு பக்கம் மகிழ்ச்சி தரும் விதமாக அரசியலுக்கு வந்து தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார் விஜய். இதன் காரணமாக அவரை தளபதியிலிருந்து தலைவர் என்கிற இடத்துக்கு நகர்த்தி தங்களையும் ரசிகர்கள் என்ற இடத்திலிருந்து தொண்டர்கள் என்ற இடத்துக்கும் ரசிகர்கள் நகர்ந்திருக்கிறார்கள். எப்படியாவது சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யை வெல்ல வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார்கள் அவர்கள்.

தீவிர களமாடல்: அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் ஆரம்பத்தில் பெரிதாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவரது அந்த மாதிரியான போக்கு விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்தது. சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விழாக்கள், கூட்டங்களில் கலந்துகொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவரது விமர்சனத்துக்கு திமுகவினரும் தொடர்ந்து தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள்.
விடாத விஜய்: இருப்பினும் திமுகவை விமர்சிப்பதை தொடர்ந்து செய்துவருகிறார் விஜய். சில நாட்களுக்கு முன்புகூட நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து விமர்சித்திருந்த விஜய்; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் திமுகவின் பெயரை இழுத்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சிம்ரனின் பதில்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வந்திருப்பதற்கு ஆதரவாக திரைத்துறையிலிருந்து சமுத்திரகனி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து நடிகை சிம்ரன் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "விஜய் நல்ல நடிகர். டான்ஸர். சண்டை காட்சிகளில் எல்லாம் அவ்வளவு அற்புதமாக நடிக்கக்கூடியவர்.
அவர் ஒரு ஆல் - ரவுண்டர்: அவர் ஒரு ஆல் - ரவுண்டர். அரசியலிலும் அவர் கண்டிப்பாக சிறப்புடன் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார். முன்னதாக விஜய்யும் சிம்ரனும் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். கோலிவுட்டை பொறுத்தவரை சிம்ரனும் விஜய்யும் சிறந்த ரீல் ஜோடிகளில் ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











