பார்த்திபன் படத்தில் பாடகியாகிறார் நடிகை சிம்ரன்....

சென்னை: தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். தற்போது தன் குரலால் மக்களை மயக்க இருக்கிறாராம்.

தமிழில் துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். புகழின் உச்சியில் இருந்தபோதே, கடந்த 2003-ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாப் பிரவேசம் செய்த சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் சில படங்களில் தோன்றினார்.

ஜாக்பாட் அடித்தது...

ஜாக்பாட் அடித்தது...

பழைய புகழை புதிய படங்கள் புதுப்பிக்காததால் வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்குத் தாவினார் சிம்ரன். இடையில் சொந்தப்படம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

சொந்தக் குரலில் பாட...

சொந்தக் குரலில் பாட...

ஆனால், தற்போது சிம்ரன் பாடகியாகப் போகிறாராம். அதுவும் பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என்ற படத்தில்.

வித்தியாசமான பாடல்...

வித்தியாசமான பாடல்...

அல்போன்ஸ் ஜோசப் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்ரன் பாடிய பாடல் மிகவும் வித்தியாசமாக வந்துள்ளதாக இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

பாடும் கானம்பாடி....

பாடும் கானம்பாடி....

இதுகுறித்து பார்த்திபன் கூறும் போது சிம்ரன் நடிக்க வந்த போது பாடுவதில் தான் எனக்கு விருப்பம் உள்ளது என்று கூறினார். எனவே தான் அவரை இந்த படத்தில் பாட வைத்துள்னேன் என்றார்.

கௌரவ தோற்றத்தில்...

கௌரவ தோற்றத்தில்...

பார்த்திபனின் இப்புதிய படத்தில் ஆர்யா, அமலாபால் உள்ளிட்ட பல பிரபலங்கள் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X