»   »  மீண்டும் சிம்ரன்! தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக ஒரு வருஷத்திற்கு முன்பு வரை வலம் வந்த சிம்ரன் திருமணமாகிப் போன பின் நடிப்பதில் ஆர்வம்காட்டவில்லை.கிச்சா வயசு 16 என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அப்படத்திலும் சரியாக சம்பளம் தராததால், பாதியிலேயே டூ விட்டு விட்டுப் போய் விட்டார்.பிறகு பழைய சிம்ரன் படங்களிலிருந்து கிளிப்பிங்ஸ்களை எடுத்துப் போட்டு படத்தை முடித்து வெளியே விட்டனர். போன வேகத்தில் படமும் பெட்டிக்குத் திரும்பிவிட்டது.அதன் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்க டபாய்த்து வந்தார். ரஜினியுடன் சந்திரமுகியில் நடிக்க கூப்பிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்டு சில காட்சிகளிலும்நடித்தார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி படத்திலிருந்து விலகிக் கொண்டார். இப்போது அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சிம்ரன் நல்ல ஓய்வுக்குப் பின் மீண்டும் பழைய சிம்ரனாக, ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க கணவரிடம் ஓ.கே. வாங்கி விட்டாராம்.குழந்தையை மட்டும் உறவினர்களிடம் கொடுத்து விட்டு கணவருடன் விரைவிலேயே சிம்ரன் சென்னைக்கு வரவுள்ளார். இங்கு தங்கி மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கப் போகிறாராம். இதற்காக சில முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துள்ளார் சிம்ரன்.முதல் கட்டமாக தனது பழைய பொலிவை மீண்டும் பெற யோகா உள்ளிட்ட சில உடற்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். அடுத்து, புதிதாக ஒரு மேனேஜரைபோட்டுள்ளார். பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அணுகி இவர் சிம்ரன் மீண்டும் நடிக்கத் தயாராக இருக்கிறார், நல்ல வாய்ப்புவந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளார்.கூடிய விரைவில் தமிழகத்திற்கு வந்து தனது கலைச் சேவையை கணவருடன் சேர்ந்து செய்யப் போகிறார் சிம்ரன். ஆனால் தமிழ் சினிமாவில்தான்,கல்யாணமான நடிகைகளை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்களே நமது ஹீரோக்கள்? பிறகு எப்படி சிம்ரன் மீண்டும் வாய்ப்புத் தேடி வந்துள்ளார் என்றகேள்வி எழுவது இயல்புதான்.ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பது, இல்லாவிட்டால் நாயகிக்கு முக்கியத்துவம் கதைகளாகத் தேடிப் பார்த்து அதில் நடிப்பது என்ற முடிவில்இருக்கிறாராம் சிம்ரன். அதுவும் சரிப்படாவிட்டால் என்ன செய்வது, அக்கா, அம்மா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கமுடிவு குறித்து இன்னும் சிம்ரன் தீர்மானிக்கவில்லையாம்.சொந்தமாக படம் எடுத்து அதில் கணவர் தீபக்கையும் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்ஸ் மனதில் உள்ளதாம். சென்னைக்கு வந்த பின்னர் எது சரிப்படும்என்பதைப் பொறுத்து அந்தத் திட்டத்தை கையில் எடுப்பாராம் சிம்ரன்.சிம்ரன் ரசிகர்களுக்கு இது சந்தோஷமான செய்தியாக இருக்கும்!

மீண்டும் சிம்ரன்! தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக ஒரு வருஷத்திற்கு முன்பு வரை வலம் வந்த சிம்ரன் திருமணமாகிப் போன பின் நடிப்பதில் ஆர்வம்காட்டவில்லை.கிச்சா வயசு 16 என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அப்படத்திலும் சரியாக சம்பளம் தராததால், பாதியிலேயே டூ விட்டு விட்டுப் போய் விட்டார்.பிறகு பழைய சிம்ரன் படங்களிலிருந்து கிளிப்பிங்ஸ்களை எடுத்துப் போட்டு படத்தை முடித்து வெளியே விட்டனர். போன வேகத்தில் படமும் பெட்டிக்குத் திரும்பிவிட்டது.அதன் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்க டபாய்த்து வந்தார். ரஜினியுடன் சந்திரமுகியில் நடிக்க கூப்பிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்டு சில காட்சிகளிலும்நடித்தார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி படத்திலிருந்து விலகிக் கொண்டார். இப்போது அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சிம்ரன் நல்ல ஓய்வுக்குப் பின் மீண்டும் பழைய சிம்ரனாக, ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க கணவரிடம் ஓ.கே. வாங்கி விட்டாராம்.குழந்தையை மட்டும் உறவினர்களிடம் கொடுத்து விட்டு கணவருடன் விரைவிலேயே சிம்ரன் சென்னைக்கு வரவுள்ளார். இங்கு தங்கி மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கப் போகிறாராம். இதற்காக சில முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துள்ளார் சிம்ரன்.முதல் கட்டமாக தனது பழைய பொலிவை மீண்டும் பெற யோகா உள்ளிட்ட சில உடற்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். அடுத்து, புதிதாக ஒரு மேனேஜரைபோட்டுள்ளார். பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அணுகி இவர் சிம்ரன் மீண்டும் நடிக்கத் தயாராக இருக்கிறார், நல்ல வாய்ப்புவந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளார்.கூடிய விரைவில் தமிழகத்திற்கு வந்து தனது கலைச் சேவையை கணவருடன் சேர்ந்து செய்யப் போகிறார் சிம்ரன். ஆனால் தமிழ் சினிமாவில்தான்,கல்யாணமான நடிகைகளை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்களே நமது ஹீரோக்கள்? பிறகு எப்படி சிம்ரன் மீண்டும் வாய்ப்புத் தேடி வந்துள்ளார் என்றகேள்வி எழுவது இயல்புதான்.ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பது, இல்லாவிட்டால் நாயகிக்கு முக்கியத்துவம் கதைகளாகத் தேடிப் பார்த்து அதில் நடிப்பது என்ற முடிவில்இருக்கிறாராம் சிம்ரன். அதுவும் சரிப்படாவிட்டால் என்ன செய்வது, அக்கா, அம்மா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கமுடிவு குறித்து இன்னும் சிம்ரன் தீர்மானிக்கவில்லையாம்.சொந்தமாக படம் எடுத்து அதில் கணவர் தீபக்கையும் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்ஸ் மனதில் உள்ளதாம். சென்னைக்கு வந்த பின்னர் எது சரிப்படும்என்பதைப் பொறுத்து அந்தத் திட்டத்தை கையில் எடுப்பாராம் சிம்ரன்.சிம்ரன் ரசிகர்களுக்கு இது சந்தோஷமான செய்தியாக இருக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக ஒரு வருஷத்திற்கு முன்பு வரை வலம் வந்த சிம்ரன் திருமணமாகிப் போன பின் நடிப்பதில் ஆர்வம்காட்டவில்லை.

கிச்சா வயசு 16 என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அப்படத்திலும் சரியாக சம்பளம் தராததால், பாதியிலேயே டூ விட்டு விட்டுப் போய் விட்டார்.பிறகு பழைய சிம்ரன் படங்களிலிருந்து கிளிப்பிங்ஸ்களை எடுத்துப் போட்டு படத்தை முடித்து வெளியே விட்டனர். போன வேகத்தில் படமும் பெட்டிக்குத் திரும்பிவிட்டது.

அதன் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்க டபாய்த்து வந்தார். ரஜினியுடன் சந்திரமுகியில் நடிக்க கூப்பிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்டு சில காட்சிகளிலும்நடித்தார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி படத்திலிருந்து விலகிக் கொண்டார்.


இப்போது அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சிம்ரன் நல்ல ஓய்வுக்குப் பின் மீண்டும் பழைய சிம்ரனாக, ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க கணவரிடம் ஓ.கே. வாங்கி விட்டாராம்.

குழந்தையை மட்டும் உறவினர்களிடம் கொடுத்து விட்டு கணவருடன் விரைவிலேயே சிம்ரன் சென்னைக்கு வரவுள்ளார். இங்கு தங்கி மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கப் போகிறாராம். இதற்காக சில முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துள்ளார் சிம்ரன்.

முதல் கட்டமாக தனது பழைய பொலிவை மீண்டும் பெற யோகா உள்ளிட்ட சில உடற்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். அடுத்து, புதிதாக ஒரு மேனேஜரைபோட்டுள்ளார். பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அணுகி இவர் சிம்ரன் மீண்டும் நடிக்கத் தயாராக இருக்கிறார், நல்ல வாய்ப்புவந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளார்.


கூடிய விரைவில் தமிழகத்திற்கு வந்து தனது கலைச் சேவையை கணவருடன் சேர்ந்து செய்யப் போகிறார் சிம்ரன். ஆனால் தமிழ் சினிமாவில்தான்,கல்யாணமான நடிகைகளை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்களே நமது ஹீரோக்கள்? பிறகு எப்படி சிம்ரன் மீண்டும் வாய்ப்புத் தேடி வந்துள்ளார் என்றகேள்வி எழுவது இயல்புதான்.

ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பது, இல்லாவிட்டால் நாயகிக்கு முக்கியத்துவம் கதைகளாகத் தேடிப் பார்த்து அதில் நடிப்பது என்ற முடிவில்இருக்கிறாராம் சிம்ரன். அதுவும் சரிப்படாவிட்டால் என்ன செய்வது, அக்கா, அம்மா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கமுடிவு குறித்து இன்னும் சிம்ரன் தீர்மானிக்கவில்லையாம்.

சொந்தமாக படம் எடுத்து அதில் கணவர் தீபக்கையும் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்ஸ் மனதில் உள்ளதாம். சென்னைக்கு வந்த பின்னர் எது சரிப்படும்என்பதைப் பொறுத்து அந்தத் திட்டத்தை கையில் எடுப்பாராம் சிம்ரன்.

சிம்ரன் ரசிகர்களுக்கு இது சந்தோஷமான செய்தியாக இருக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil