ராசக்காபாளையம் சிந்து துலானி!
சிந்து துலானி, மேகா நாயர் ஆகிய இரு பெரும் கும் நாயகிகள் இணைந்து கலக்கும் பசுபதி மே/பா ராசக்காபாளையம் என்ற சூப்பர் படம் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தை சிலமுறை பரீட்சித்து கையை சுட்டுக் கொண்டவர் சிந்து துலானி. முன்னழகும், பின்னழகும் சிறப்புற அமைந்தும் கூட தமிழ் சினிமாவால் கைவிடப்பட்டவர் சிந்து துலானி.கவர்சிப் பந்தாக மாறியும், கிளாமர் கில்லாடியாக திறமை காட்டியும் தன்னை கோலிவுட் கவனிக்காமல் விட்டதால் பெரும் விசனத்தில் இருப்பவர் சிந்து துலானி. இருந்தும் மனம் உடையாமல் மீண்டும் மீண்டும் தமிழிலேயே வாய்ப்புகள் தேடி வருபவர்.
அப்படிப்பட்டவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பசுபதி மூலம் வந்துள்ளது. ரஞ்சித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சிந்து துலானி. இன்னொரு ஜோடியாக வருகிறார் மேகா நாயர்.
மெத்தென்று மெதுவடை சிந்து துலானி என்றால், ஜிலேபி கெண்டை மீன் போல வாகானவர் மேகா நாயர். மலையாளத்து ஜிலீர் சிப்ஸ் மேகா நாயருக்கு தமிழில் இது முதல் படம். ஆனால் அவரது கேரியரில் இது இரண்டாவது படம்.
ஏற்கனவே தெலுங்கில் ஆதி என்ற படத்தில் அதிரடியாக கிளாமர் காட்டி அசத்தியுள்ளர் மேகா. அதைக் கேள்விப்பட்டுத்தான் ராசக்காபாளையத்திற்கு அவரைக் கூட்டி வந்து கும்மியடிக்க விட்டுள்ளனர்.
இரு பெரும் கிளாமர் ராணிகள் படத்தில் இருந்தாலும் கிளாமரை விட தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம் இது. நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகராக ஆகிய படங்களை விஜய்யை வைத்து இயக்கிய செல்வபாரதிதான் இப்படத்தையும் இயக்குகிறார்.
கிளாமர் கிள்ளுகிறதா, தாய்மை வெல்லுகிறதா என்பது படம் வந்தால்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











