»   »  ஆச்சரிய சிந்து துலானி

ஆச்சரிய சிந்து துலானி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிந்து துலானியின் கிளாமர் கிளுகிளுப்பில் உருவாகப் போகிறது ஆச்சரியம்.

ஸ்டெப்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கணபதி அய்யர் தயாரித்து வழங்கும் படம்தான்ஆச்சரியம். பெயரிலேயே ஆச்சரியம் இருக்கிறதே,

படத்திலும்... என்று இழுப்பதற்குள் நமது வாயில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையைபோட்டு கரெக்டா சொன்னேள், படத்திலும் ஏகப்பட்ட ஆச்சரியமான மேட்டர்கள்உண்டு என்று முடித்தார் இயக்குனர் சஞ்சய்.

ஆச்சரியம் மூலம் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் சிந்து துலானி. சுள்ளானில்அறிமுகமாகி, மன்மதனில் சிட்டாக சிறகடித்துப் பறந்த சிந்து அதற்கப்புறம் காணாமல்போய் விட்டார்.

ஹீரோயின் வாய்ப்ப எட்டாக் கனியாகி விட்டதால் குத்துப் பாட்டில் குதித்தார்.மஜாவில் விக்ரமுடன் அஜக் ஆட்டம் போட்டார். அதற்கு முன் அலையடிக்குதேபடத்தில் முழு நீள கிளாமரில் கலக்கினார்.

அப்படியும் வாய்ப்பு வராததால் தெலுங்கிலேயே நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு ஆச்சரிய நாயகியாக்கியுள்ளனர்.

ஆச்சரியம் படத்தை இயக்கும் சஞ்சய் புதுமுக இயக்குனரே. படத்தின் கதை படுவித்தியாசமானது என்று கூறி நம்மை ஆச்சரியப்படுத்தினார். அப்படி என்னதான் ஓய்கதைல கீது? என்று சஞ்சயை ஓரம் கட்டியபோது,

படத்தோட நாயகன் முன்னா ஒரு கால்பந்து வீரர். படத்தில் பல கொலைகள்நடக்கிறது. அந்தக் கொலைகளில் ஹீரோவுக்கு சம்பந்தம் இருப்பதாக ஒரு சந்தேகம்எழுகிறது. ஆனால் உண்மையில் ஹீரோவுக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் உள்ளதாஎன்பதுதான் கதையே என்றார் சஞ்சய்.

கொலைகார கதையா இருக்கே அப்ப எதுக்கு சிந்து என்று நாம் மறுபடியும்ஆச்சரியப்பட்டபோது, சிந்து மட்டும் படத்தில் இல்லீங்கண்ணா, கூடவே பிரியாவும்இருக்காங்க என்று மறுபடியும் மறுபடியும் நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

பிரியாவா? என்று வாயைப் பிளந்தபோது, மெதுவாக மூடி விட்டு, மல்லி படம்பார்த்தீங்களா. அதில் நடித்தவர்தான் பிரியா. குட்டிப் பொண்ணா அதில் நடித்தார்,இதில் சுட்டிப் பொண்ணா வருகிறார் என்று விளக்கினார்.

படத்தில் கால்பந்தும், கொலைகளும் மட்டும் இல்லையாம், கிளாமரும் போதியஅளவில் போஷாக்காக சேர்க்கப்பட்டுள்ளதாம். அனைத்துத் தரப்பினரையும் கவரும்வகையில் இப்படத்தில் அத்தனை மேட்டர்களும் நீக்கமற நிறைந்திருக்குமாம்.

கலக்கலுக்கு சிந்துவும், பிரியாவும் இருப்பது போல நகைச்சுவை குலுக்கலுக்குவடிவேலுவும் இருக்கிறார். கூடவே பாண்டுவும், மனோபாலாவும் இருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கும் ஒருவர்இந்தப் படத்தில் அரவாணி வேடத்தில் வந்து அசத்தப் போகிறாராம்.

படத்துக்காக நிஜமாகவே ஒரு அழகிப் போட்டியை நடத்தி அதை படத்திலும் கோர்த்துவிடப் போகிறார்களாம்.

ஜூலையில் ஊட்டிக்குப் போய் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு அப்படியேகோபிச்செட்டிப்பாளையம், பாண்டிச்சேரிக்கும் போய் படத்தை வளர்க்கிறார்கள்.

சிந்துவுக்கு இதற்கு முன்போ இன்னொரு படமும் கைக்கு கிடைத்தது. அதுபேரரசுவின் தம்பியாபிள்ளை முத்துவடுகு இயக்கவிருந்த முரசு. அதில் சிந்துவை2வது ஹீரோயினாக போட்டிருந்தார்கள்.

விஜய்தான் ஹீரோ. ஆனால் சிந்துவின் கெட்ட நேரமோ என்னவோ முரசு படத்தைஸ்டாப் செய்து வைத்துவிட்டார் விஜய்.

போக்கிரியை மடித்து விட்டுத்தான் முத்துவடுகு பக்கம் பார்வையைத் திருப்புவார்விஜய் என்கிறார்கள். அப்போது சிந்துவுக்கு விஜய்யுடன் ஜோடி வாய்ப்புகிடைக்கலாம்.

அந்தப் பட வாய்ப்புக்கு முன் ஆச்சரியம் மூலம் ரசிகர்களை அசத்திடும் திட்டத்தில்இருக்கும் சிந்து, இந்தப் படத்திலும் ஒரு குத்துப் பாட்டுக்கு கொத்து புரோட்டாபோடவுள்ளாரம்..

ஸ்ரீகாந்த் தேவா மியூசிக் ஆச்சே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil