என்னது... தற்கொலைக்கு முயற்சித்தேனா.. அதெல்லாம் சும்மா! - சிந்து மேனன்

By Shankar

நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை தின்று சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது.

தமிழில் 'சமுத்திரம்', யூத், 'கடல் பூக்கள்', 'ஈரம்' படங்களில் நடித்தவர் சிந்து மேனன். தெலுங்கு மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.

Sindhu Menon denies suicide attempt

சிந்து மேனனுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் இளைஞர் பிரபுவுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் சுபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில்தான் அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் படத்துடன் சிலர் செய்தி வெளியிட்டனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு சிந்துமேனன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. நான் லண்டனில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்,' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X