»   »  விஷாலுக்கு ஜோடியாய் சிந்து துலானி-தேஜாஸ்ரீ

விஷாலுக்கு ஜோடியாய் சிந்து துலானி-தேஜாஸ்ரீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீமாசென்னுடன் தான் நடித்த செல்லமே படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தானே அடுத்து ஒரு படத்தை தமிழில் தயாரிக்கமுடிவு செய்துவிட்டார் விஷால்.

தெலுங்கின் மிகப் பெரிய தயாரிப்பாளரின் மகனான விஷாலுக்கு செல்லமே நல்ல மார்கெட்டை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதையடுத்துதனது தந்தையின் உதவியுடன் தமிழில் ஒரு படத்தையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரித்து நடிக்க முடிவு செய்துவிட்டார் விஷால்.

இந்தப் படங்களில் இடம் பிடிக்க ரீமா சென்று கடுமையாக முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது.

அவருக்குப் பதிலாக கவர்ச்சிப் புயல் சிந்து துலானி, கவர்ச்சி சுனாமி தேஜாஸ்ரீ என இரு ஹீரோயின்கலை புக் செய்துவிட்டார் விஷால்.

இப்போது அலையடிக்குதே படத்தில் ஜெகஜால ஜெயலட்சுமியின் கேரக்டரில் நடித்து வரும் சிந்து துலானி வாய்ப்புகளுக்காக அலையோஅலை என்று அலைகிறார். அப்படி அலைந்து தான் விஷால் முலம் வாய்ப்பைப் பிடித்தாராம்.

அதே போல ஜொள் பார்ட்டினான அர்ஜூனின் சின்னா படத்திலும் ஒரு வாய்ப்பை பெற்று விட்டார் சிந்து. இதில் அவருக்கு நடிக்க எந்தகேரக்டரும் இல்லை. இருந்தாலும் அர்ஜூனை சந்தித்துப் பேசி ஒத்தை பாட்டுக்கு ஆடும் வாய்ப்பை வாங்கிவிட்டார்.

மன்மதனிலும் இப்படித்தான் சிம்புவைப் பிடித்து சின்ன ரோலை வாங்கினார். இப்போது சின்னா.

ஹீரோயின் வேஷம் என்று காத்திருப்பதில் எல்லாம் சிந்துவுக்கு நம்பிக்கையில்லையாம். காற்றுள்ளவரை தூற்றிக் கொள் பாலிஸி தான்.

ஜெயலட்சுமி கேரக்டரில் நடிக்க முதலில் மீனாவைத் தான் போட இருந்தார்களாம். ஆனால், அவர் மிரண்டு ஜகா வாங்கிவிடவே, துணிந்துஉடை இறக்கம் செய்து நடிக்கும் நடிகையைத் தேடியிருக்கிறார்கள்.

அப்போது பைனலைஸ் ஆனவர் தான் சிந்து துலானி. அவரும் சொல்பேச்சு கேட்டு நல்ல ஒத்துழைப்பு தந்து நடித்து வருகிறார்.

தேஜாஸ்ரீயை கவர்ச்சிக்கு தான் என்று தமிழ் சினிமாவில் முத்திரை குத்திவிட்டார்கள். இதனால் அவரும் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல்அப்படிப்பட்ட ரோல்களையே கேட்டு வாங்கி வருகிறார்.

விஷாலின் படத்திலும் செகண்ட் ஹீரோயினாகவே நடிக்கப் போகிறார்.

அது ஒரு கனாக் காலத்தில் பாலுமகேந்திராவையே மீண்டும் இளமைக் காலத்துக்குக் கூட்டிச் சென்றுவிடும் லெவலுக்கு சுள்ளான் தனுசுடன்பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார் தேஜாஸ்ரீ. இதைத் தவிர நண்பன் எம்பிபிஎஸ் என்ற படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil