»   »  சிந்துவும் ரவளியும் சுள்ளான் படத்தின் மூலம் மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சிந்து துலானிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புக்கள்அமையவில்லை.சுள்ளான் தனுசுக்கு தொடர்ச்சியான தோல்விப் படமாக அமைந்துவிட, நொந்து போய் இருந்தார் சிந்து. ஆனாலும் தனது கவர்ச்சிமேல் கணிசமான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர்களை சந்தித்துப்பேசியதன் விளைவாக அலையடிக்குதே என்ற படம் கிடைத்தது.அதில் தான் மட்டுமல்லாமல் தனது தங்கை நேகாவுக்கும் போனஸ் ரோல் கேட்டு வாங்கினார். இருவரும் சேர்ந்து சுனாமி அலைமாதிரி கவர்ச்சியை அள்ளி வீசினர்.ஆனால், படம் படுதோல்வியடைந்துவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த சிந்துதுலானியை சிங்கிள் பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடக் கூப்பிட்டுவிட்டார்கள் சில கோலிவுட் ஆட்கள்.நடிச்சு 2 படம் கூட வரலை.. அதுக்குள்ள குத்தாட்டமா என்று வெறுத்துப் போன சிந்து அப்படியே தெலுங்கு உலகில்தஞ்சமடைந்தார். அங்கு தனது திறமையை எடுத்துக் காட்டி வாய்ப்பு வேட்டையைத் துவக்கினார்.வேட்டையை ஆரம்பித்த நேரத்தைப் பாருங்கள்.. அங்கு சிந்து நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.என்.டி.ஆரின் பேரன் வகையராவைச் சேர்ந்த கல்யாண் ராம் என்பவருடன் சேர்ந்து இவர் நடித்த அதனு ஒகடே என்ற படம்பெரும் வெற்றியடைந்துவிட்டது.இதில் கவர்ச்சியில் பாகிஸ்தான் எல்லைக்கே போய்விட்டு வந்திருக்கிறார் சிந்து துலானி. தெலுங்கு பட ஹீரோயினுக்கு எல்லாஅம்சங்களும் நிறைந்து வழிவதால் சிந்துவை அப்படியே அள்ளிக் கொண்டிருக்கிறது டோலிவுட்.வரிசையாக வாய்ப்புக்கள் வந்து குவிந்து வருவதால் இவரது கால்ஷீட்டுக்காக சில படங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து அப்படியே தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிடும் முடிவில் இருக்கிறாராம். அறிந்தும் அறியாமலும் படத்தின் ஹீரோவாக நடித்த நவ்தீப் தெலுங்குக்குப் போகிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சிந்துதுலானி தான்.இதில் சிந்துவுக்கு அக்காவாக மாஜி கவர்ச்சிக் கன்னி ரவளி நடிக்கிறார். படங்களே ஓடாவிட்டாலும் கதாநாயகியாகவேகாலத்தைத் தள்ளி வந்த ரவளி அக்கா வேசம் கட்டுவது இதுவே முதல்முறையாம்.இந்த வேடம் எடுபட்டுவிட்டால் விரைவில் தமிழிலும் அம்மா, அக்கா வேடங்களில் புகும் முடிவில் இருக்கிறாராம் ரவ்ஸ்.

சிந்துவும் ரவளியும் சுள்ளான் படத்தின் மூலம் மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சிந்து துலானிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புக்கள்அமையவில்லை.சுள்ளான் தனுசுக்கு தொடர்ச்சியான தோல்விப் படமாக அமைந்துவிட, நொந்து போய் இருந்தார் சிந்து. ஆனாலும் தனது கவர்ச்சிமேல் கணிசமான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர்களை சந்தித்துப்பேசியதன் விளைவாக அலையடிக்குதே என்ற படம் கிடைத்தது.அதில் தான் மட்டுமல்லாமல் தனது தங்கை நேகாவுக்கும் போனஸ் ரோல் கேட்டு வாங்கினார். இருவரும் சேர்ந்து சுனாமி அலைமாதிரி கவர்ச்சியை அள்ளி வீசினர்.ஆனால், படம் படுதோல்வியடைந்துவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த சிந்துதுலானியை சிங்கிள் பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடக் கூப்பிட்டுவிட்டார்கள் சில கோலிவுட் ஆட்கள்.நடிச்சு 2 படம் கூட வரலை.. அதுக்குள்ள குத்தாட்டமா என்று வெறுத்துப் போன சிந்து அப்படியே தெலுங்கு உலகில்தஞ்சமடைந்தார். அங்கு தனது திறமையை எடுத்துக் காட்டி வாய்ப்பு வேட்டையைத் துவக்கினார்.வேட்டையை ஆரம்பித்த நேரத்தைப் பாருங்கள்.. அங்கு சிந்து நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.என்.டி.ஆரின் பேரன் வகையராவைச் சேர்ந்த கல்யாண் ராம் என்பவருடன் சேர்ந்து இவர் நடித்த அதனு ஒகடே என்ற படம்பெரும் வெற்றியடைந்துவிட்டது.இதில் கவர்ச்சியில் பாகிஸ்தான் எல்லைக்கே போய்விட்டு வந்திருக்கிறார் சிந்து துலானி. தெலுங்கு பட ஹீரோயினுக்கு எல்லாஅம்சங்களும் நிறைந்து வழிவதால் சிந்துவை அப்படியே அள்ளிக் கொண்டிருக்கிறது டோலிவுட்.வரிசையாக வாய்ப்புக்கள் வந்து குவிந்து வருவதால் இவரது கால்ஷீட்டுக்காக சில படங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து அப்படியே தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிடும் முடிவில் இருக்கிறாராம். அறிந்தும் அறியாமலும் படத்தின் ஹீரோவாக நடித்த நவ்தீப் தெலுங்குக்குப் போகிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சிந்துதுலானி தான்.இதில் சிந்துவுக்கு அக்காவாக மாஜி கவர்ச்சிக் கன்னி ரவளி நடிக்கிறார். படங்களே ஓடாவிட்டாலும் கதாநாயகியாகவேகாலத்தைத் தள்ளி வந்த ரவளி அக்கா வேசம் கட்டுவது இதுவே முதல்முறையாம்.இந்த வேடம் எடுபட்டுவிட்டால் விரைவில் தமிழிலும் அம்மா, அக்கா வேடங்களில் புகும் முடிவில் இருக்கிறாராம் ரவ்ஸ்.

Subscribe to Oneindia Tamil

சுள்ளான் படத்தின் மூலம் மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சிந்து துலானிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புக்கள்அமையவில்லை.

சுள்ளான் தனுசுக்கு தொடர்ச்சியான தோல்விப் படமாக அமைந்துவிட, நொந்து போய் இருந்தார் சிந்து. ஆனாலும் தனது கவர்ச்சிமேல் கணிசமான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர்களை சந்தித்துப்பேசியதன் விளைவாக அலையடிக்குதே என்ற படம் கிடைத்தது.

அதில் தான் மட்டுமல்லாமல் தனது தங்கை நேகாவுக்கும் போனஸ் ரோல் கேட்டு வாங்கினார். இருவரும் சேர்ந்து சுனாமி அலைமாதிரி கவர்ச்சியை அள்ளி வீசினர்.


ஆனால், படம் படுதோல்வியடைந்துவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த சிந்துதுலானியை சிங்கிள் பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடக் கூப்பிட்டுவிட்டார்கள் சில கோலிவுட் ஆட்கள்.

நடிச்சு 2 படம் கூட வரலை.. அதுக்குள்ள குத்தாட்டமா என்று வெறுத்துப் போன சிந்து அப்படியே தெலுங்கு உலகில்தஞ்சமடைந்தார். அங்கு தனது திறமையை எடுத்துக் காட்டி வாய்ப்பு வேட்டையைத் துவக்கினார்.

வேட்டையை ஆரம்பித்த நேரத்தைப் பாருங்கள்.. அங்கு சிந்து நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.என்.டி.ஆரின் பேரன் வகையராவைச் சேர்ந்த கல்யாண் ராம் என்பவருடன் சேர்ந்து இவர் நடித்த அதனு ஒகடே என்ற படம்பெரும் வெற்றியடைந்துவிட்டது.


இதில் கவர்ச்சியில் பாகிஸ்தான் எல்லைக்கே போய்விட்டு வந்திருக்கிறார் சிந்து துலானி. தெலுங்கு பட ஹீரோயினுக்கு எல்லாஅம்சங்களும் நிறைந்து வழிவதால் சிந்துவை அப்படியே அள்ளிக் கொண்டிருக்கிறது டோலிவுட்.

வரிசையாக வாய்ப்புக்கள் வந்து குவிந்து வருவதால் இவரது கால்ஷீட்டுக்காக சில படங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து அப்படியே தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிடும் முடிவில் இருக்கிறாராம்.

அறிந்தும் அறியாமலும் படத்தின் ஹீரோவாக நடித்த நவ்தீப் தெலுங்குக்குப் போகிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சிந்துதுலானி தான்.


இதில் சிந்துவுக்கு அக்காவாக மாஜி கவர்ச்சிக் கன்னி ரவளி நடிக்கிறார். படங்களே ஓடாவிட்டாலும் கதாநாயகியாகவேகாலத்தைத் தள்ளி வந்த ரவளி அக்கா வேசம் கட்டுவது இதுவே முதல்முறையாம்.

இந்த வேடம் எடுபட்டுவிட்டால் விரைவில் தமிழிலும் அம்மா, அக்கா வேடங்களில் புகும் முடிவில் இருக்கிறாராம் ரவ்ஸ்.

Read more about: sindhu dulani busy in telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil