»   »  சிந்து துலானியின் மஜா! என்னென்னவோ செய்துபார்த்தும் ஹீரோயின் வாய்ப்பு சரிவர குதிராததால், கொதிப்படைந்து போன சிந்து துலானி சிங்கிள்பாட்டுக்கு ஜில் டான்ஸ் ஆட வந்து விட்டார்.சுள்ளான் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் சிந்து துலானி. சுள்ளான் சரியாகப் போகாததால், தனுஷ் மட்டுமல்லசிந்துவும் ரொம்பவே நொந்து போனார். தனுஷ் கூட சேரும் நடிகைகளுக்கு நல்ல எதிர்காலம் என்ற ராசியை நம்பியிருந்த அவர்அது எடுபடாததால், வெந்து வெதும்பிப் போனார். அந்த நேரம் பார்த்து சிம்பு, சிந்துவைக் கூப்பிட்டு தனது மன்மதன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்தார். ஜோதிகா,சிம்புவின் நடிப்புக்கு இணையாக சிந்துவும் அப்படத்தில் பேசப்பட்டார். என்ன பிரயோசனம்! அடுத்தடுத்து படங்கள்வரவில்லையே!

சிந்து துலானியின் மஜா! என்னென்னவோ செய்துபார்த்தும் ஹீரோயின் வாய்ப்பு சரிவர குதிராததால், கொதிப்படைந்து போன சிந்து துலானி சிங்கிள்பாட்டுக்கு ஜில் டான்ஸ் ஆட வந்து விட்டார்.சுள்ளான் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் சிந்து துலானி. சுள்ளான் சரியாகப் போகாததால், தனுஷ் மட்டுமல்லசிந்துவும் ரொம்பவே நொந்து போனார். தனுஷ் கூட சேரும் நடிகைகளுக்கு நல்ல எதிர்காலம் என்ற ராசியை நம்பியிருந்த அவர்அது எடுபடாததால், வெந்து வெதும்பிப் போனார். அந்த நேரம் பார்த்து சிம்பு, சிந்துவைக் கூப்பிட்டு தனது மன்மதன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்தார். ஜோதிகா,சிம்புவின் நடிப்புக்கு இணையாக சிந்துவும் அப்படத்தில் பேசப்பட்டார். என்ன பிரயோசனம்! அடுத்தடுத்து படங்கள்வரவில்லையே!

Subscribe to Oneindia Tamil

என்னென்னவோ செய்துபார்த்தும் ஹீரோயின் வாய்ப்பு சரிவர குதிராததால், கொதிப்படைந்து போன சிந்து துலானி சிங்கிள்பாட்டுக்கு ஜில் டான்ஸ் ஆட வந்து விட்டார்.

சுள்ளான் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் சிந்து துலானி. சுள்ளான் சரியாகப் போகாததால், தனுஷ் மட்டுமல்லசிந்துவும் ரொம்பவே நொந்து போனார். தனுஷ் கூட சேரும் நடிகைகளுக்கு நல்ல எதிர்காலம் என்ற ராசியை நம்பியிருந்த அவர்அது எடுபடாததால், வெந்து வெதும்பிப் போனார்.

அந்த நேரம் பார்த்து சிம்பு, சிந்துவைக் கூப்பிட்டு தனது மன்மதன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்தார். ஜோதிகா,சிம்புவின் நடிப்புக்கு இணையாக சிந்துவும் அப்படத்தில் பேசப்பட்டார். என்ன பிரயோசனம்! அடுத்தடுத்து படங்கள்வரவில்லையே!


இருந்தும் சிந்துவைப் போட்டு அலையடிக்குது படத்தை எடுத்தார்கள். அதில் கூடவே அவரது தங்கையையும் சேர்த்து கலக்கவைத்தனர். சிந்துவும் தனது முழுத் தெறமையையும் அலையடிக்குது படத்தில் காட்டியிருந்தார். கிளாமரும் எக்குத் தப்பாகஇருக்கவே நிச்சயம் இதில் தேறி விடுவோம் என்று நம்பினார் சிந்து.

கூடவே, தன்னைப் புக் செய்தால் தனது தங்கையை சம்பளம் வாங்காமல் தெறமை காட்ட வைப்பதாகவும் நூல் விட்டுப் பார்த்தார்சிந்து. அலையடிக்குது புட்டுக்கிட்டதால் எல்லாமே நொம்பலமாகிப் போனது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே பம்மிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இப்படியே விட்டால்ஏகப்பட்ட ரகஸ்யாக்களும், லிண்டாக்களும் ஏறி மேய்ந்து போய் விடுவார்கள் என்ற பயம் வந்து விட்டதால் சிங்கிள் பாட்டுக்குகுத்தாட்டம் போடவும் ரெடி என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு ஓலை அனுப்பி வைத்தார் சிந்து.


அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. விக்ரம், அஸின் ஜோடியாக நடிக்க உருவாகும் மஜாவில், சூப்பர் மசாலா பாட்டுக்கு சரிகுத்து குத்தியுள்ளாராம் சிந்து. இந்தப் பாட்டின் மூலம் ஏகப்பட்ட குத்துப் பாட்டுக்கு வாய்ப்பு வரும் என்று சிந்து எதிர்பார்க்கிறார்.

ஹீரோயின் வாய்ப்புக்காக விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட குத்துப் பாட்டுக்கு ஆடி விட்டு கணிசமாக டப்புசேர்க்கும் வழியைப் பார்க்கலாம் என்ற முடிவுக்கும் சிந்து வந்து விட்டார். அதனால் முடிந்த வரை முன்னணி ஹீரோக்கள் அத்தனைபேரின் படத்திலும் தலா ஒரு குத்துப் பாட்டாவது ஆடி விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாய்ப்புகளை தேடித் தேடி ஓடஆரம்பித்துள்ளார் சிந்து.

ரசிகர்களுக்கு மஜாதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil