ஹீரோயின்
மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படத்தில் அறிமுகமானவர் சிந்தூரி. அந்தப் படம் இன்னும் வெளியானபாட்டைக் காணோம்.
அந்தப் படம் தயாராகிக் கொண்டே இருந்தபோது ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.ஹீரோயின் ஹரிணியின் தோழிகளில் ஒருவராக நடித்தார்.
படம் அட்டர் பிளாப் ஆனதில் ஹரிணிக்கே தமிழில்சான்ஸ் இல்லாமல் போய்விட்டது. இதனால் தெலுங்குப் பக்கமாக ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால், சிந்தூரி மட்டும் ரொம்ப நம்பிக்கையாக தமிழில் தொடர்ந்து முயற்சி செய்தார். தனது உல்டா புல்டாஆல்பங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்து, பின்னாலேயே நேரிலும் போயும் பேசி வந்தார்.
அவரது தீராத முயற்சிகளுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. முதலில் என்னவோ பிடிச்சிருக்கு என்றபடத்தில் ஹீரோயின் சான்ஸ் அடித்தது.
அதில் கவர்ச்சியை அள்ளி வீச, அதை அறிந்த கிங் மூவி மேக்கர்ஸ்நிறுவனம் தங்களது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் இவரை ஹீரோயினாக்கிவிட்டது.
என்னவோ பிடிச்சிருக்கு படத்தில் இவர் காதல் கொண்டேனில் நடித்த சுதீப்புடன் ஜோடி சேருகிறார். என்னசெய்யப் போகிறாயில்ட அபிநவ் என்ற புதுமுகத்துக்கு ஜோடி.
இரு படங்களின் சூட்டிங்கும் முழு வேகத்தில் ஆரம்பித்துள்ளது. என்ன செய்யப் போகிறாய் படப்பிடிப்புவிசாகப்பட்டிணன், தலக்கோணம், சென்னையிலுமாக சூட்டிங் நடந்து கொண்டுள்ளது. இதனால் சென்னைக்கும்ஆந்திராவுக்குமாக மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார் சிந்தூர்.
இரு படங்களிலும் அநியாயத்துக்கு கவர்ச்சியாய் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படியே ஹைதராபாத் போய் டோலிவுட் ஆட்களையும் சந்தித்து தெலுங்கிலும் சான்ஸ் கேட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











