சிந்து துலானியின் யோகம் கோலிவுட் அவ்வளவாக கைகொடுக்காவிட்டாலும் சுள்ளான் சிந்து துலானியை ஆந்திர திரையுலகம் சிவப்புக் கம்பளம்விரித்து வரவேற்றுள்ளது. இவர் நடித்து வெளியான அத்தனக்கோடே என்ற படத்தின் சூப்பர் வெற்றி சிந்துவை எங்கேயோகொண்டு போய் விட்டது.தனுஷின் சுள்ளான் என்ற மகா தோல்விப்படம் மூலம் அறிமுகமானவர் தான் இந்த சிந்து துலானி. முதல் படமே ஊத்திக்கொண்டதால் திக்குத் தெரியாத காட்டில் இவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். இப்படியே கையை வீசிக்கொண்டிருந்தால் நிலைமை மோசமாகி விடுமே என்று பயந்து தான் சிம்புவை காக்கா பிடித்துத் தான்மன்மதனில் கவர்ச்சி துள்ளாட்டம் போட ஒரு வாய்ப்பை பெற்றார். இதே பாலிசியை பின் பற்றித்தான் செல்லமே விஷால் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில்இரண்டாவது கதாநாயகியாக தேஜாஸ்ரீயும் உண்டு. இது தவிர அலையடிக்குதே என்ற ஒரு லோ பட்ஜெட் படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டார். அவ்வளவு தான் கோலிவுட்டில்சிநதுவுக்கு கிடைத்த வாய்ப்புகள்.தனது வழக்கமான பாணியை பின்பற்றி பலருக்கு வலைவீசிப் பார்த்தார் சிந்து. ஆனால் அவரை யாரும் கண்டு கொள்வதாகஇல்லை. இந்த சமயத்தில் தான் அவருக்கு தெலுங்கு உலகம் ஆதரவுக் கரம் நீட்டியது.என்.டி. ராமராவின் பேரனான கல்யாண் ராமராவுக்கு ஜோடியாக அத்தனக்கோடே என்ற படத்தில் நடிக்க சிந்துவுக்கு வாய்ப்புகிடைத்தது. ஏற்கனவே தெலுங்கு உலகில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் என்.டி. ராமராவின் பேரனான ஜூனியர் என்.டி.ராமராவின் சகோதரர் தான் இந்த கல்யாண்.கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்த இவர் இந்தப் படத்தில் கவர்ச்சிக் களத்தில் முண்டாசுக் கட்டிகுதித்தார். படம் சிந்து துலானி எதிர்பார்த்ததை விட ஒரே ஓட்டமாக ஓடியது.வழக்கமாக பிற மொழிகளில் வெற்றி பெறும் படத்தை வாங்கி அதை தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி இருக்கும்.ஏனென்றால் இப்போது ரிஸ்க் எடுக்க யாரும் விரும்பாததால் ரஜினி தொடங்கி, விஜய் வரை இந்த பாலிசியைத் தான்பின்பற்றுகிறார்கள்.அதே போலத் தான் இந்தப் படத்தின் உரிமையையும் வாங்க தமிழ் கதாநாயகர்களுக்கு இடையேயும், தயாரிப்பாளர்களுக்குஇடையேயும் பெரும் போட்டி நடந்தது. இறுதியில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தான் பெரிய விலை கொடுத்துஅத்தனக்கோடேவை வாங்கியுள்ளார்.அப்பா கஷ்டப்பட்டு வாங்கிய படத்தில் வழக்கம் போல விஜய் நடிக்கிறார். ஜோடியாக த்ரிஷா வேடம் கட்டுகிறார்.என்னடா இது, சிந்து துலானியில் ஆரம்பித்து கதை எங்கோயோ போய் விட்டதே என்று நினைக்கிறீர்களா? இதோ மீண்டும்விட்ட இடத்திற்கே வந்து விட்டோம். முதல் படமான அத்தனக்கோடே நன்றாக ஓடுவதால் சிந்துவுக்கு வாய்ப்புகள் வந்த குவிந்து கொண்டிருக்கிறதாம். அவ்வளவுதான் சிந்துவுக்கும் படம் ஓடிய வேகத்தை விட இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.முதல் வாய்ப்பாக அறிந்தும் அறியாமலும் பட நாயகன் நவ்தீப்புடன் ஜோடியாக ஒரு படத்தில் சிந்து ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை அருண் பிரசாத் டைரக்ட் செய்கிறார். இதில் சிந்துவுக்கு அக்காவாக சீமைப்பசு ரவளி நடிக்கிறார்.கதாநாயகியாக இருந்த ரவளி அக்கா வேஷம் போடும் முதல் படம் இது தான்.எனவே கொஞ்ச நாளைக்கு சிந்துவை கோலிவுட் பக்கம் பார்க்க முடியாது!

By Staff

கோலிவுட் அவ்வளவாக கைகொடுக்காவிட்டாலும் சுள்ளான் சிந்து துலானியை ஆந்திர திரையுலகம் சிவப்புக் கம்பளம்விரித்து வரவேற்றுள்ளது. இவர் நடித்து வெளியான அத்தனக்கோடே என்ற படத்தின் சூப்பர் வெற்றி சிந்துவை எங்கேயோகொண்டு போய் விட்டது.

தனுஷின் சுள்ளான் என்ற மகா தோல்விப்படம் மூலம் அறிமுகமானவர் தான் இந்த சிந்து துலானி. முதல் படமே ஊத்திக்கொண்டதால் திக்குத் தெரியாத காட்டில் இவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இப்படியே கையை வீசிக்கொண்டிருந்தால் நிலைமை மோசமாகி விடுமே என்று பயந்து தான் சிம்புவை காக்கா பிடித்துத் தான்மன்மதனில் கவர்ச்சி துள்ளாட்டம் போட ஒரு வாய்ப்பை பெற்றார்.

இதே பாலிசியை பின் பற்றித்தான் செல்லமே விஷால் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில்இரண்டாவது கதாநாயகியாக தேஜாஸ்ரீயும் உண்டு.

இது தவிர அலையடிக்குதே என்ற ஒரு லோ பட்ஜெட் படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டார். அவ்வளவு தான் கோலிவுட்டில்சிநதுவுக்கு கிடைத்த வாய்ப்புகள்.

தனது வழக்கமான பாணியை பின்பற்றி பலருக்கு வலைவீசிப் பார்த்தார் சிந்து. ஆனால் அவரை யாரும் கண்டு கொள்வதாகஇல்லை. இந்த சமயத்தில் தான் அவருக்கு தெலுங்கு உலகம் ஆதரவுக் கரம் நீட்டியது.

என்.டி. ராமராவின் பேரனான கல்யாண் ராமராவுக்கு ஜோடியாக அத்தனக்கோடே என்ற படத்தில் நடிக்க சிந்துவுக்கு வாய்ப்புகிடைத்தது. ஏற்கனவே தெலுங்கு உலகில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் என்.டி. ராமராவின் பேரனான ஜூனியர் என்.டி.ராமராவின் சகோதரர் தான் இந்த கல்யாண்.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்த இவர் இந்தப் படத்தில் கவர்ச்சிக் களத்தில் முண்டாசுக் கட்டிகுதித்தார். படம் சிந்து துலானி எதிர்பார்த்ததை விட ஒரே ஓட்டமாக ஓடியது.

வழக்கமாக பிற மொழிகளில் வெற்றி பெறும் படத்தை வாங்கி அதை தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி இருக்கும்.ஏனென்றால் இப்போது ரிஸ்க் எடுக்க யாரும் விரும்பாததால் ரஜினி தொடங்கி, விஜய் வரை இந்த பாலிசியைத் தான்பின்பற்றுகிறார்கள்.

அதே போலத் தான் இந்தப் படத்தின் உரிமையையும் வாங்க தமிழ் கதாநாயகர்களுக்கு இடையேயும், தயாரிப்பாளர்களுக்குஇடையேயும் பெரும் போட்டி நடந்தது. இறுதியில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தான் பெரிய விலை கொடுத்துஅத்தனக்கோடேவை வாங்கியுள்ளார்.

அப்பா கஷ்டப்பட்டு வாங்கிய படத்தில் வழக்கம் போல விஜய் நடிக்கிறார். ஜோடியாக த்ரிஷா வேடம் கட்டுகிறார்.

என்னடா இது, சிந்து துலானியில் ஆரம்பித்து கதை எங்கோயோ போய் விட்டதே என்று நினைக்கிறீர்களா? இதோ மீண்டும்விட்ட இடத்திற்கே வந்து விட்டோம்.

முதல் படமான அத்தனக்கோடே நன்றாக ஓடுவதால் சிந்துவுக்கு வாய்ப்புகள் வந்த குவிந்து கொண்டிருக்கிறதாம். அவ்வளவுதான் சிந்துவுக்கும் படம் ஓடிய வேகத்தை விட இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

முதல் வாய்ப்பாக அறிந்தும் அறியாமலும் பட நாயகன் நவ்தீப்புடன் ஜோடியாக ஒரு படத்தில் சிந்து ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை அருண் பிரசாத் டைரக்ட் செய்கிறார். இதில் சிந்துவுக்கு அக்காவாக சீமைப்பசு ரவளி நடிக்கிறார்.கதாநாயகியாக இருந்த ரவளி அக்கா வேஷம் போடும் முதல் படம் இது தான்.

எனவே கொஞ்ச நாளைக்கு சிந்துவை கோலிவுட் பக்கம் பார்க்க முடியாது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X