»   »  பிரியமான சிந்தூரி!

பிரியமான சிந்தூரி!

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தில் 2வது நாயகியாக வந்து போன சிந்தூரி இப்போது சின்னஇடைவெளிக்குப் பிறகு பிரியமான காதலர்களே படத்தில் முழுவீச்சில் தனதுதிறமையைக் காட்டி ஃபுல் மீல்ஸ் கொடுக்க வருகிறார்.

பாய்ஸ் படத்தில் ஜெனீலியாதான் (அப்போது ஹரிணி) டாப் நாயகியாக வலம்வந்தார். சிந்தூரிக்கு அதில் 2வது நாயகி வேடம்தான். அட்டகாச அழகுடன் இருக்கும்சிந்தூரிக்கு அதற்குப் பிறகு நல்ல படங்கள் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கில் கொஞ்ச காலம் தலை, உடல் காட்டி வந்த சிந்தூரி சின்னஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். காதலை மையமாக வைத்துஎடுக்கப்படும் பிரியமான காதலர்களே (ஏதோ பப்ளிக் மீட்டிங் வைத்து காதலைக்கற்றுக் கொடுக்கப் போவது போல இருக்குது டைட்டில்!) படத்தில் சிந்தூரி தனதுமுழுத் திறமையையும் கொட்டி கலக்கி நடித்துள்ளாராம்.

முன்பை விட சற்றே பூரிப்பான உடல் வாகுடன், கூடுதல் கிளாமர் போஷாக்குடன்சிந்தூரி இதில் தனது திறமையைக் காட்டியுள்ளார். படம் முழுக்க கிளாமர் கலக்கல்கள்ஏராளமாம். அதற்கேற்ப சிந்தூரியின் தாராளமும் அமோகமாக தெரிகிறது.

முண்டா பனியனையும், முக்கா டிரவுசரையும் போட்டு சிந்தூரி விளையாடியுள்ளார்.திமிறும் முன்னழகு, குமுறும் நடிப்பு என பின்னி எடுத்துள்ளார் சிந்தூரி.

ஒரு ஸ்டில்லைப் பார்த்தால், நீல நிறத் தாவணி அவரது அழகை மறைக்கிறது என்றுநினைத்தோ என்னவோ, பாதியைத் தூக்கி கீழே போட்டு விட்டு பதை பதைக்கவைக்கும் போஸ் கொடுத்திருக்கிறார் சிந்தூரி. சிம்ப்ளி சூப்பர்ப் போங்கோ!

பனியன் காஸ்ட்யூமில் மட்டுமல்லாது மாடர்ன் டிரஸ்ஸிலும் மத மதர்ப்பாகஅமர்க்களப்படுத்தியிருக்கிறாராம் சிந்தூரி. இந்த சந்தில் புகுந்துவிளையாடியிருக்கிறாராம் கூட நடித்துள்ள ஹீரோ சாரும்.

கிளாமர் ஹோதாவில் இதுவரை முழுசாக இறங்காததன் பலனை அனுபவித்து விட்டசிந்தூரி, இளம் நடிகைகளுக்கு நான் இளப்பமில்லை என்பது போல இந்தப் படத்தில்கிளாமர் தேரில் ஏறி பவனி வந்திருக்கிறார்.

காதலை மையமாகக் கொண்ட கதை என்பதால் படம் முழுக்க இளமை எக்ஸ்பிரஸ்படு ஸ்பீடாக ஓடுகிறதாம். கவர்ச்சியை அள்ளி இறைத்து எடுக்கப்படும் படம்என்பதால், படமும் படு ஓட்டம் ஓடி போட்ட காசை திருப்பிக் கொடுத்து கல்லாவைபலமாக்கி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பிரியமான காதலர்களே படயூனிட்.

ஸோ, காதல் பிரியர்களுக்கு சிந்தூரி பிரியாணி செம விருந்துதான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil