twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணம்மாபேட்டை சிந்தூரி சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக் ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் "ஒத்துழைப்புகொடுத்தார்.ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.படத்தின் பெயர் என்ன தெரியுமோ? கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம்? கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.

    By Staff
    |

    சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.

    மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.

    அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.

    இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக்

    ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.


    எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் "ஒத்துழைப்புகொடுத்தார்.

    ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.

    இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.

    ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.

    தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.


    படத்தின் பெயர் என்ன தெரியுமோ? கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.

    பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

    படத்தின் கதை என்னவாம்? கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).

    அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.

    படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.

      Read more about: sindhuris kannamapettai
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X