ஓவர் போதை.. காரில்தான் அது நடந்தது.. பிரபல ஹீரோயின் பற்றி பரபரப்பு கிளப்பிய பாடகர்
மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க கங்கனா குறித்து பாடகர் ஜஸ்பிர் ஜாசி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.

தமிழில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஓபனாக பேசும் கங்கனா: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது என பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.
எம்.பி கங்கனா: கங்கனா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது எம்.பியாகிவிட்டதால் அவர் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.
பாடகர் பேட்டி: அவர் இப்போது எமர்ஜென்சி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியில் சுடுவதுபோன்று காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதனை நீக்க முடியாது என்று கங்கனா பிடிவாதம் காட்டுவதால் சென்சார் போர்டு பிடியில் இந்தப் படம் இப்போது சிக்கியிருக்கிறது. இந்நிலையில் பாடகர் ஜஸ்பிர் ஜாசி கங்கனா குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், "பஞ்சாப் மக்களை அதிகளவு கங்கனா ரணாவத் தாக்கி பேசிவருகிறார். இதனால் அவர் பற்றிய உண்மை தகவல்களை நான் சொல்கிறேன்.
போதையில் கங்கனா: ஒருநாள் டெல்லியில் இருந்தபோது கங்கனா ரணாவத் ஒரு தோழியுடன் எனது காரில்தான் இருந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தார். சுயநினைவே இல்லை. நிலைத்தடுமாறியிருந்தார். அவர் எடுத்துக்கொண்டது மாதிரி மதுவையும், பிற போதை பொருள்களையும் எடுத்துக்கொண்டு பார்த்ததில்லை. சீக்கியர்கள் பற்றி பேசுவதை கங்கனா ரணாவத் நிறுத்த வேண்டும். பிறகு அவர் பற்றிய பல தகவல்களை நான் வெளியிட வேண்டியதாய் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











