மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த பாடகி ஜொனிடா காந்தி... குவியும் லைக்ஸ்!
சென்னை: பிரபலமான பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி, அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டெல்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, பின் கனடாவில் செட்டிலானார். இதையடுத்து, அவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான, ஓ காதல் கண்மணி படத்தில் வரும் "மனம் மனம் மென்டல் மனமே" பாடலை பாடிய இவர் தான். இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா பாடல் மிகக்பெரிய அளவில் டிரெண்டானது.

ஜோனிடா காந்தி: பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இப்படத்தை இயக்கி இருந்தார். அண்மையில் ஜோனிடா காந்தி அளித்த பேட்டியில், தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து பேசி இருந்தார். இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது நான் ஒரு விஷயத்தை பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஒரு ஆண் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதற்கு பின் எனது போட்டோவை வைத்திருந்தான். இதுபோலவே பலர் தினமும் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று பாடகி ஜோனிடா காந்தி கூறி தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இரண்டு புள்ளி ஆறு மில்லியன் பாலோவர்ளை வைத்து இருக்கும் ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











