'அறையில் நின்றிருந்தேன், ஒருவன் அருகில் வந்து..' தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி பாடகி பகீர்!

By

சென்னை: சிறுவயதில் தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக பிரபல பின்னணி பாடகி கூறியுள்ளார்.

தமிழில், சத்தம் போடாதே படத்தில், பேசுகிறேன் பேசுகிறேன், வாகை சூடவா படத்தில் போறானே போறானே உட்பட சில பாடல்களை பாடியிருப்பவர், நேகா பாசின்.

பிரபல பின்னணி பாடகியான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இவர் ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இவர் தற்போது தனது சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். சினிமா பிரபலங்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த, பாலியல் தொல்லை விஷயங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஆமிர்கானின் மகள் ஐரா, தனது சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறியிருந்தார்.

சிறு வயதில்

சிறு வயதில்

'என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆனது. பின்னர் நானே இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியேறிக் கொண்டேன்' என்று கூறியிருந்தார். பிரபல இந்தி நடிகை அனுப்பிரியா கோயங்காவும், தனக்கு சிறு வயதில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்திருந்தார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

ஆன்மீகவாதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும் அவரிடம் இருந்து கஷ்டப்பட்டுத் தப்பியதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல பாடகி நேகா பாசின், தானும் தனது 10 வயதில் பாலியல் தொல்லைகளை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

ஆடைக்குள் கையை

ஆடைக்குள் கையை

எனக்கு அப்போது பத்து வயது. ஹரித்துவாருக்குச் சென்றிருந்தோம். என் அம்மா எனக்கு சில அடிகள் முன்னே நின்றாள். அப்போது ஒருவர் என் ஆடைக்குள் கையை விட்டான். எனக்கு அதிரிச்சியாகிவிட்டது. பயத்தில் ஓடிவிட்டேன். அடுத்த சில வருடங்களில் இன்னொரு சம்பவத்தை எதிர்கொண்டேன்.

முகமற்ற பயங்கரவாதம்

முகமற்ற பயங்கரவாதம்

ஒரு அறையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒருவன் மார்பகங்களை பிடித்தான். இந்த இரண்டு சம்பவங்கள் என் நினைவில் இருக்கின்றன. இது என்னுடைய தவறு என்று நான் நினைக்கிறேன். ஆனால், இன்று சோசியல் மீடியாவில், மனரீதியாக, உடல்ரீதியாக, ஆன்மீக ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதை முகமற்ற பயங்கரவாதமாக நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X