நடிகைகளில் இசைக்குயில்கள்!... ஜெ முதல் நித்யா மேனன் வரை...
அழகாக இருக்கும் நடிகைகளுக்கு குரல் நன்றாக இருக்காது என்பார்கள். அதனால் டப்பிங் பேசி சமாளிப்பார்கள். ஆனால் இப்போதோ நடிகைகள் நடிப்பதோடு இசை ஞானத்தோடும் இருக்கின்றனர்.
சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடிப்பதோடு மட்டுமல்லாது பாடவும் செய்கின்றனர் பல நடிகைகள்.
நடிகைகள் பின்னணி பாடி நடிப்பது இன்றைய சமாச்சாரம் மட்டுமல்ல 1950, 60 களிலேயே பாடி நடித்துள்ளனர். பானுமதி, எஸ்.வரலட்சுமி, மனோரமா, ஜெயலலிதா என பல நடிகைகள் பின்னணி பாடி நடித்துள்ளனர்.
இன்றைக்கு பல இளம் நடிகைகள் பின்னணி பாடுகின்றனர் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆண்ட்ரியா ஜெரோம்
கண்ட நாள் முதல் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழில் பிரபல நடிகையானார். பின்னணி குரல், பின்னணிப் பாடல் அசத்தல் நடிகையாக உள்ளார் ஆண்ட்ரியா ஜெரோம்.

ஸ்ருதிஹாசன்
இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகையாக பிரபலமானவர் ஸ்ருதிஹாசன். இவர் டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ரம்யா நம்பீசன்
ராமன் தேடிய சீதை, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடிகையாக மட்டுமே அறியப்பட்ட ரம்யா நம்பீசன் பாண்டியநாடு படத்தில் டி.இமான் இசையில் பாடியுள்ளார்.

நித்யா மேனன்
நித்யாமேனன் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். இப்போது தமிழில் பாட உள்ளாராம் நித்யா.

மேக்னா ராஜூ
காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னா ராஜும், ஒரு கன்னட படத்தில், சொந்த குரலில் பாடியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா
தமிழில் மட்டுமல்லாது இந்தியில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா பாட்டுப் பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளார். அவரைப் போல மாதுரி தீக்ஷித், ஸ்ரீதேவி, ஜூஹிசாவ்லா போன்ற பாலிவுட் பிரபலங்கள் பாடல்கள் பாடியுள்ளனர். நடிகைகள் சொந்தக்குரலில் பாடி ஹிட் ஆவதால் பல நடிகைகள் பாட முயற்சி செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











