»   »  மோடி இந்தியாவின் 'பெஸ்ட் பேச்சலர்'.. 'சிங்கிள்' மல்லிகா புகழாரம்!

மோடி இந்தியாவின் 'பெஸ்ட் பேச்சலர்'.. 'சிங்கிள்' மல்லிகா புகழாரம்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

உதய்ப்பூர்: இந்தியாவின் தலை சிறந்த பேச்சலர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

உதய்ப்பூரில் நடந்த ரியாலிட்டி ஷோவின் படப்பிடிப்புக்காக வந்த இடத்தில் இப்படி பேசினார் மல்லிகா.

மேரே கயலோன் கி மல்லிகா என்ற ரியாலிட்டி ஷோவில் மல்லிகா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு உதய்ப்பூரில் நடந்தபோதுதான் செய்தியாளர்களிடம் பேசினார் மல்லிகா.

இந்தியாவின் பொருத்தமான பேச்சலர்

இந்தியாவின் பொருத்தமான பேச்சலர்

நாட்டின் மிகப் பொருத்தமான பேச்சலராக மோடி திகழ்கிறார் மிகவும் ஸ்மார்ட் ஆக இருக்கிறார். முற்போக்கு எண்ணம்கொண்டவராகவும் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார் மல்லிகா.

சர்ச்சை வருமோ...

சர்ச்சை வருமோ...

மல்லிகாவின் இந்தப் பேச்சால் ஏதாவது சர்ச்சை வருமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் வெறும் வாயை மெல்பவர்களுக்கு நல்ல அவல் கிடைத்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு படமும் இல்லை

ஒரு படமும் இல்லை

தற்போது மல்லிகா சும்மாதான் இருக்கிறார். அதாவது அவரது கையில் படம் எதுவும் இல்லை.

டிவிக்கு முதல் முறையாக

டிவிக்கு முதல் முறையாக

இந்த நிலையில் முதல் முறையாக அவர் டிவிக்கு வருகிறார். சுயம்வரம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குத்தான் மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிட்டுள்ளனர்.

மோடியும் தலை காட்டுவாரா...

மோடியும் தலை காட்டுவாரா...

இந்த நிகழ்ச்சியில் மோடியையும் தலை காட்ட வைப்பாரா மல்லிகா என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood actress Mallika Sherawat, who was in Udaipur for shooting of her reality show ‘Mere Khayalon ki Mallika’, is all praises for Gujarat Chief Minister Narendra Modi. While talking to reports in Udaipur, Mallika called Modi to be a perfect bachelor of India. Giving the reasons, she said that Modi is smart and progressive. The sex symbol of the silver screen Mallika Sherawat has made her presence felt in Bollywood through several films like ‘Khwahish’, ‘Murder’ and international films like ‘Myth’ and ‘Hiss’. However, recently, she has not seen in many films.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more