பப்ளிக்கா சொல்வாங்கனு கனவா கண்டேன்.. ஓபனாக போட்டுடைத்த சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து தனக்கான அடையாளத்தை பெற்றவர் ஸ்ருதி நாராயணன். அந்த சீரியலில் கிடைத்த பிரபல்யத்தை அடுத்து தொடர்ந்து டிவி சீரியல்களில் நடித்த அவர்; சமந்தா நடித்திருந்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க அவரது அந்தரங்க வீடியோ என்று ஒன்று சில மாதங்களுக்கு முன் பரவியது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். கார்த்திகை தீபம் என்கிற சீரியலில் முதன்முறையாக தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார் அவர். அந்த சீரியலில் அவருக்கு ஓரளவு முக்கியமான ரோல்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருந்தன.

சிறகடிக்க ஆசை: அதன்படி மாரி சீரியலில் நடித்த அவர்; விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான ரோலை ஏற்றார். அந்த சீரியலை கண்டு ரசிக்கும் பலரும் ஸ்ருதியின் நடிப்பையும் பாராட்டிவருகிறார்கள். மேலும் சீரியல் மூலம் அவருக்கு வெப் சீரிஸ் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் ஸ்ருதி.

அந்தரங்க வீடியோ?: இப்படிப்பட்ட நிலைமையில் அவரது அந்தரங்க வீடியோ என ஒன்று சொல்லி வெளியானது. அது பயங்கரமாக ட்ரெண்டும் ஆனது. 23 வயதே ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கக்கூடாது என்று பலரும் கூறினார்கள். முதலில் ஒரு வீடியோ வெளியானபோது விளக்கமளித்திருந்த ஸ்ருதி நாராயணன், "இந்த விஷயத்தில் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது. ஃபோன் திரைக்கு பின்னால் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரைப் பற்றி யாருக்கும் பேச நேரமில்லை. இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றிதான் நடந்துகொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள்கூட யாரும் யோசிக்கவில்லை" என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

Siragadikka Aasai Serial Actress Shruthi Narayanan s Latest Interview Goes Trending
Photo Credit:

இன்னொரு வீடியோ: அந்த விளக்கம் கொடுத்த சில நாட்களிலேயே இன்னொரு வீடியோவும் வெளியானது. அது இந்த விவகாரத்தில் மேற்கொண்டு பரபரப்பையும் பஞ்சாயத்தையும் கூட்டியது. இருப்பினும் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பது தெளிவாகவே கூறிவந்தார் அவர். ஆனால் ஒருதரப்பினரோ அவர் சொல்லிய விஷயத்தை நம்புவதற்கு தயாராக இல்லை. மேலும் அந்த வீடியோவில் இருப்பது ஸ்ருதிதான் என்பதை உறுதியாக கூறினார்கள்.

கட்ஸ் திரைப்படம்: நிலவரம் இப்படி இருக்க அவர் கட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சமீபத்தில்தான் வெளியானது. படம் தோல்வியைத்தான் சந்தித்தது. மேலும் இந்தப் படத்தின் பத்திரிகியாளர் சந்திப்பின்போது ஸ்ருதியை சுற்றி ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கபப்ட்டன. அதற்கெல்லாம் நிதானமாகவும், தெளிவாகவும் தனது பதிலை முன்வைத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ஸ்ருதியின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் உங்களுக்கு ப்ரோபோசல் எல்லாம் வந்திருக்கிறதா என்று தொகுப்பாளர் கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி, "எல்லாம் ஜோக்கோட ஜோக்காக போய்விடும். டேர் என்று ஒன்று சொல்கிறீர்கள். டேர் என்றால் அதை ஜோக் என்று நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும். இப்படி ஓபனாக, பப்ளிக்காக யாராவது சொல்வார்கள் என்று நான் கனவா கண்டேன். மகளிர் பள்ளி, மகளிர் கல்லூரியில்தான் படித்தேன். இங்கே நான் எங்கே போய் ப்ரோபோசலை தேடுவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X