காமத்துக்கு ஏங்குகிறார்கள்.. ஆண்களை விளாசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலின் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். இதற்கு முன்னதாகவே அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெகு பிரபல்யத்தை கொடுத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் இருக்கும் அந்தரங்க வீடியோ என சொல்லி இரண்டு வீடியோக்கள் வெளியாகின. அது சின்னத்திரை உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சின்னத்திரையில் நடித்து பிரபலமாகிவிட்டால் சினிமாவிலும் எளிதாக அறிமுகமாகும் சூழல் இப்போது நிலவிவருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, ப்ரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, வாணி போஜன் உள்ளிட்டோர் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள். அதன் காரணமாக பெரிய திரை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்னத்திரையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று பலரும் முயல்கிறார்கள். அந்தவகையில்தான் ஸ்ருதி நாராயணன் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.
ஃபேமஸ் சீரியல் நடிகை: 23 வயதாகும் அவர் முதலில் கார்த்திகை தீபம் சீரியலில் அறிமுகமானார். அது அவருக்கு ஓரளவுக்கு அடையாளத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த அவர் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான ரோலில் நடித்துவருகிறார். மேலும் சில சீரியல்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. சீரியல் மட்டுமின்றி சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய வீடியோ: சின்னத்திரையில் அறிமுகமான சில காலத்திலேயே பாலிவுட் வெப் சீரிஸில் நடிக்கும் அளவுக்கு இருக்கும் ஸ்ருதியின் திறமையை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்து அவருக்கு வாழ்த்துகள் சொன்னார்கள். கண்டிப்பாக அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் ஆரூடம் கூற ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர் தொடர்பான அந்தரங்க வீடியோ என சொல்லி ஒரு வீடியோ வெளியானது. முதல் வீடியோ வெளியான அடுத்த சில நாட்களில் இன்னொரு வீடியோவும் வெளியானது. அதுவும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ருதியின் பதிலடி: இந்த விவகாரம் தொடர்பாக அவர் எந்த விளக்கமும் கொடுக்காம இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கு உணர்வுகள் உண்டு. அனைத்தையுமே காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என் போல்தான் உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் காட்டமான ஸ்ருதி: அவரது அந்த பதிலடி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னொரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "இந்த விஷயத்தில் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது. ஃபோன் திரைக்கு பின்னால் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரைப் பற்றி யாருக்கும் பேச நேரமில்லை. இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றிதான் நடந்துகொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள்கூட யாரும் யோசிக்கவில்லை.
மன ரீதியாக பாதிக்கப்படலாம்: இப்படி நடப்பதால் அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்படலாம். காட்டுத் தீ போல் இதை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களுமே காமத்துக்கு ஏங்குபவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. நானும் உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பதை எத்தனை முறைதான் சொல்வது. மனித குலகத்துக்காக இதை நிறுத்துங்கள். இது தாழ்மையான வேண்டுகோள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











