அந்த வார்த்தை சொல்லி திட்டுவாரு.. ‘யூத்’ ஹீரோ கென் கருணாஸ் பற்றி ஓபனா பேசிய ‘சிறை’ ஹீரோயின்!

சென்னை: தாய் கிழவி திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. கண்டிப்பாக இந்த வாரம் தியேட்டருக்கு மீண்டும் ரசிகர்களை தாய் கிழவி கண்டிப்பாக அழைத்து வருவாள் என்றே தெரிகிறது. தாய் கிழவி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படமாக கென் கருணாஸின் 'யூத்' படம் அமைந்துள்ளது.

கென் கருணாஸ் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக எழுதி இயக்கியுள்ள 'யூத்' திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கென் கருணாஸ் ஹீரோயின்களை எப்படி திட்டுவார் என அந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அனிஷ்மா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.

Sirai Actress Anishma Anilkumar opens up how Ken Karunas scold her at the sets
Photo Credit:

யூத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே 3 பள்ளி மாணவிகள் கென் கருணாஸ் உடன் பைக்கில் இருக்கும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் லவ் ஸ்டோரி படங்களாக வரத் தொடங்கி விட்டதே என்கிற சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன.

கென் கருணாஸுக்கு 3 ஹீரோயின்கள்: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் ஏற்கனவே அசுரன், விடுதலை 2 படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனுஷை போல இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ள யூத் திரைப்படம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. புது நடிகர்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பதே கஷ்டமாக உள்ள சூழலில் முதல் படத்திலேயே கென் கருணாஸுக்கு அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியான்ஷி யாதவ் என 3 ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். இதில், சிறை பட நடிகை அனிஷ்மாவுக்குத்தான் சற்று கூடுதல் முக்கியத்துவம் உள்ளதாக கூறுகின்றனர்.

அறிவுக்கெட்டவளேன்னு திட்டுவாரு: கென் கருணாஸ் ஹீரோவாக மட்டுமின்றி இந்த படத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ள நிலையில், ஹீரோயின்களிடம் வேலை வாங்கும் போது எப்படி வாங்குவார், ஏதாவது திட்டுவாரா என்கிற கேள்வியை நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்ப "அறிவுக்கெட்டவளேன்னு திட்டுவாரு" என சிறை பட ஹீரோயின் அனிஷ்மா ஓபனாக பேசியது வைரலாகி வருகிறது.

நாங்களும் திட்டுவோம்: விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தில் நடித்த மலையாள நடிகை மீனாட்சி தினேஷ் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அவர் பேசும் போது அவரும் எங்கள திட்டுவாரு, ஒரு சில நேரங்களில் நாங்களும் அவரை திட்டுவோம். ஒரே ஜாலியாகவும் ஃபன்னாகவும் தான் ஷூட்டிங் நடந்தது என பேசி டேமேஜ் கன்ட்ரோல் செய்துள்ளார். அபிஷன் ஜீவிந்துக்கு வித் லவ் திரைப்படம் வெற்றிகரமாக அமைந்தது போல கென் கருணாஸுக்கு யூத் படம் ஹிட் கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2 அதே நாளில் வெளியாகவுள்ள நிலையில் வசூலில் அடிவாங்கும் என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X