Keerthy Suresh: வாவ்.. புடவையில் ஆளை அசத்தும் கீர்த்தி சுரேஷ்!
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் இசைவெளியீட்டு விழாவிற்கு மார்டன் தமிழச்சியாக சேலையில் வந்து அசத்திய கீர்த்தி சுரேசை ரசிகர்கள் வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் பல லைக்குகளை பெற்று தற்போது டிரெண்டாகி வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன.

கீர்த்தி சுரேஷின் அம்மாவும் தமிழ் நடிகை என்பதால் இவருக்கு தமிழ் சரளமாக வந்தது. இதனால், ஏராளமான தமிழ் இயக்குநர்களின் பர்ஸ்ட் சாய்ஸாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 என பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

நடிக கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் பேசிய நிலையில், அனைவரின் வாயையும் தனது அபாரமான நடிப்பின் மூலம் அடைந்தார். அந்தப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

மாமன்னன் படத்தில்: இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்தார். இதையடுத்து, அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலுனுக்கு ஜோடியாக புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் மகத்தான வெற்றியை பெற்று கணிசமான வசூலை அள்ளியது.

சைரன் இசைவெளியீட்டுவிழா: தற்போது கீர்த்தி சுரேஷ், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள சைரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரமாண்டமான பொருட் செலவில் உருவான இந்த திரைப்படத்தில், ஜெயம்ரவி, அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில்,அந்த விழாவிற்கு கீர்த்தி சுரேஷ் அனைவரும் வாய் பிளக்கும் வகையில் சேலையில் மிகவும் அட்டகாசமாக வந்தார். மார்டன் தமிழச்சியாக அவர் இருந்த அழகைப்பார்த்து ரசிகர்கள் உச்சுக்கொட்டி வருகின்றனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது
பேசி ஜான்: தற்போது, கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தியில் ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











