அடடா.. புதைகுழியில் சிக்கிட்டாரே ஐஸ்வர்யா....!
சென்னை: சிறுவாணி படத்தின் ஷூட்டிங்குக்காக சிறுவாணி காட்டுப் பகுதிக்குள் போயிருந்தபோது அங்கு படத்தின் நாயகனும், நாயகியும் புதைகுழியில் சிக்கி வி்ட்டார்களாம். பிறகென்ன.. ஊர்க்காரர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனராம்.

சஞ்சய் - ஐஸ்வர்யா
சஞ்சய் நாயகனாகவும், ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கும் படம்தான் சிறுவாணி. மருமலை பிக்சர்ஸ் இதைத் தயாரிக்கிறது.

தேவா இசை
தேனிசைத் தென்றல் தேவாதான் இசையமைக்கிறார். பாடல்கள் பட்டையைக் கிளப்பும் வகையிலும், பலம் தரும் வகையிலும் அமைந்திருப்பதாக பூரிப்புடன் சொல்கிறார் இயக்குநர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

சிறுவாணி காட்டுக்குள்..
படம் குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறுகையில்,படப்பிடிப்புக்காக சிறுவாணி காட்டு பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தினோம். கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினோம்.

புதைகுழியில் சிக்கினர்..
அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி. திடீர் என்று இருவரும் புதைகுழியில் விழுந்து விட்டனர் பயத்தில் அவர்கள் கதற ஆரம்பித்தவுடன் காப்பாற்ற நாங்கள் ஓடினோம்.

ஊர்மக்கள் வந்து காப்பாற்றினர்
நடந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் சிலர் எங்களுடன் இணைந்து இருவரையும் காப்பாற்றினார்கள்.

உயிர் போய் திரும்பி வந்தது
அந்த ஊரை சேர்ந்த எனக்கே அந்த நிமிடத்தில் உயிர் போய் உயிர் வந்தது. படத்தில் இது மாதிரி நிறைய சம்பவங்களை சந்தித்திருக்கிறோம்.

அந்தமானில் அட்டைக்கடி...
அந்தமானில் அட்டை கடிக்கு பலர் நிறைய ரத்தத்தை இழந்திருக்கிறோம் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படமும்,பாடல் காட்சிகளும் சிறப்பாக வந்திருகிறது. தேவா சாரின் பாட்டு எங்களுக்கு பெரிய பலம் என்றார்.


Click it and Unblock the Notifications











