Mrunal Thakur: சீதாவா நடிச்சிட்டு.. ஸ்ரீலங்காவுல இப்படியா.. மிருணாள் தாகூரை விளாசும் ரசிகர்கள்!
சென்னை: சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் இலங்கையில் படு கவர்ச்சியாக பீச்சில் பிகினி போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
விட்டி தண்டு எனும் மராத்தி படத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான மிருணாள் தாகூர். லவ் சோனியா படத்தின் மூலம் 2018ல் பாலிவுட்டில் அறிமுகமானார்.

டோலிவுட்டில் துல்கர் சல்மான் உடன் இணைந்து சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர். செம ஹோம்லியாக அந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் தற்போது இலங்கை பீச்சில் பிகினி உடைகளில் தொடர்ந்து வித விதமாக செம ஹாட்டான போஸ்களை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
மராத்தி நடிகை:
மகராஷ்ட்ராவில் பிறந்து வளர்ந்த மிருணாள் தாகூர் 2012ம் ஆண்டு டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 2014ம் ஆண்டு அப்படியே மராத்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர், விட்டி தண்டு மற்றும் சுராஜ்யா என இரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்பை பார்த்து வியந்துப் போன பாலிவுட் இயக்குநர் லவ் சோனியா படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

ஹே சீதா:
லவ் சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுஸ், டூஃபேன், கோஸ்ட் ஸ்டோரீஸ், தமாகா, ஜெர்ஸி என பல பாலிவுட் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு டோலிவுட்டில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சீதாவாக நடித்து இந்தியளவில் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தார் மிருணாள் தாகூர்.

கவர்ச்சி
இலங்கையில் பிகினி உடையில்:
ஜீ ஜெஸ்ட் எனும் நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்றுள்ள நடிகை மிருணாள் தாகூர், இலங்கையில் வெறும் உள்ளாடையுடன் பீச்சில் கவர்ச்சிகரமாக குளிக்கும் போட்டோக்களையும், செம ஹாட்டான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

சீதாவா நடிச்சிட்டு:
சீதாராமம் படத்தில் சீதாவாக நடிச்சிட்டு இப்படி ஸ்ரீலங்காவுல பிகினி உடையில் போஸ் கொடுக்கிறீயேம்மா இதெல்லாம் நியாமா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு மிருணாள் தாகூரின் திடீர் ஹாட்னஸை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். பாலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆகி உள்ள நிலையில், கவர்ச்சி காட்டினால் தான் முன்னணி ஹீரோயினாக வர முடியும் என்பதை புரிந்து கொண்டே ரூட்டை மாற்றியிருக்கிறார் மிருணாள் தாகூர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











