செல்ஃபி கேட்ட ரசிகர்கள்.. சீதா ராமம் நடிகை செஞ்ச வேலையை பாருங்க!
சென்னை: நடிகை மிருணாள் தாகூர் அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். சீதா ராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் இவரது கேரியர் பெஸ்டாக அமைந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்து வருகின்றன. ரசிகர்களின் விருப்பத்திற்குள்ளான மிருணாள் தாகூர் ரசிகர்களுடன் செல்ஃபி கொடுத்ததில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
மிருணாள் தாகூரின் செயல் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ரசிகர்களின் ஆதரவால்தான் நடிகர், நடிகைகள் கோடிகளில் புழங்குகின்றனர். ஆனாலும் அவர்களை ஒதுக்கி வைப்பதில் இவர்களுக்கு என்னதான் நன்மை கிடைத்துவிடும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. சமீபத்தில் ரசிகர் கேட்ட செல்ஃபிக்கு இளம் நடிகை ஒருவர் கோபத்துடன் பதில் சொன்னது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

நடிகை மிருணாள் தாகூர்: நடிகை மிருணாள் தாகூர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு தாவியவர்களில் இவரும் முக்கியமானவராக கருதப்படுகிறார். தெலுங்கில் இவரது சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. குறிப்பாக சீதாராமம் படத்தில் சீதாவாக நடித்து ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார் மிருணாள் தாகூர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மிருணாள், இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
தள்ளி நின்ற மிருணாள் தாகூர்: அடுத்தடுத்து தன்னுடைய ஒர்க் அவுட் வீடியோக்கள், ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்டு வருகிறார். யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மிருணாள் தாகூர், இதன் மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, விமான நிலையத்தில் ரசிகர்களின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த இவர், ஒரு அடி தள்ளி நின்று அந்த செல்ஃபிக்களுக்கு போஸ் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளஙகளில் வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் மிருணாள் தாகூர்: ரசிகர்களின் ஆதரவால்தான் இத்தகைய நடிகர், நடிகைகள் முன்னணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீப காலங்களில் எப்போதுமே ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில நடிகர்களே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பலரும் இந்த செல்ஃபி விஷயங்களில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் தன்னிடம் செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் இருந்து மிகவும் தள்ளி நின்று மிருணாள் தாகூர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
க்யூட் போட்டோஷுட்கள்: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மிருணாள் தாகூர். தெலுங்கை தொடர்ந்து விரைவில் தமிழ் படங்களிலும் இவர் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்சின் காஞ்சனா 4 படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் மிருணாள் தாகூர், போட்டோஷுட்களை அதிகமாக எடுத்து வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 13.5 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











