Mrunal Thakur: மினி பிகினியில் முரட்டு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்.. ஷாக்கான சீதாராமம் ஃபேன்ஸ்!

சென்னை: 30 வயதாகும் இளம் மராத்தி நடிகை மிருணாள் தாகூர் திடீரென படு கவர்ச்சியாக நீல நிற மினி பிகினியில் செம ஹாட்டாக சம்மர் ஹாலிடேவை என்ஜாய் பண்ணும் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

2014ம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்

லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான மிருணாள் தாகூர் சீதா ராமம் படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

மராத்தி நடிகை

மராத்தி நடிகை

மராத்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மிருணாள் தாகூர் விட்டி தண்டு மற்றும் சுரஜ்யா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். அதன் பிறகு பெண்களை கடத்தி விற்பனை செய்யும் கதையான லவ் சோனியா படத்தில் மிரட்டல் நடிப்பை கொடுத்து பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த மிருணாள் தாகூருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.

ஹ்ரித்திக் ரோஷன் படத்தில்

ஹ்ரித்திக் ரோஷன் படத்தில்

லவ் சோனியா படத்தைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார் மிருணாள் தாகூர். பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், டூஃபேன், தமாகா மற்றும் ஜெர்ஸி என தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து வளரும் நடிகையாக இந்தி திரையுலகில் கலக்கி வருகிறார்.

சீதா ராமம் நூர்ஜஹான்

சீதா ராமம் நூர்ஜஹான்

கடந்த ஆண்டு தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டிலும் அறிமுகமானார். சீதா ராமம் படத்தில் மிருணாள் தாகூர் இதுவரை நடித்திராத அளவுக்கு செம அழகாக ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கப்பட்டு இருந்த நிலையில், துல்கரை போல ரசிகர்களும் சீதா.. சீதா.. என மிருணாள் மீது காதல் வயப்பட்டு வருகின்றனர்.

மினி பிகினியில் மிரட்டல்

மினி பிகினியில் மிரட்டல்

சீதா ராமம் படத்தில் சேலை மற்றும் சுடிதார் என இழுத்து மூடிக் கொண்டு நடித்த மிருணாள் தாகூர் திடீரென சம்மர் விடுமுறை கொண்டாடும் விதமாக ஒன் சைடட் ஸ்லீவ் வைத்த நீல நிற பிகினியில் நீலக் கடலில் முரட்டுப் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

சில்க்காக மாறிய சீதாராமம் நடிகை

சில்க்காக மாறிய சீதாராமம் நடிகை

என்ன சீதா இப்படி சில்க்கா மாறிட்டாரே என நெட்டிசன்கள் சீதாராமம் நடிகை படு கவர்ச்சியாக 2 பீஸில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டிய நிலையில், அதிர்ச்சியுடன் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். #MrunalThakur ஹாஷ்டேக்கும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

கைவசம்

கைவசம்

இந்தி மற்றும் தெலுங்கில் கைவசம் ஏகப்பட்ட படங்கள் மிருணாள் தாகூருக்கு உள்ளன. கும்ரா, பூஜா மெரி ஜான், பிப்பா, ஆன்ச் மிச்சோலி உள்ளிட்ட 4 படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன. மேலும், நடிகர் நானியின் 30வது படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார் மிருணாள் தாகூர். சூர்யா 42 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் இவர் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X