ஜூம் பண்ணி பாக்காதீங்க ப்ளீஸ்.. க்யூட் டூ ஹாட்.. மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் போட்டோ!
சென்னை: சீதாராமம் படத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்த நடிகை மிருணாள் தாகூர் இணையத்தில் அதிரிபுதிரியான போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.
மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர்.
இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

சீதா ராமம்: ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு நடித்திருந்தார். பீல் குட் லவ் ஸ்டோரியை நீண்ட நாட்களுக்கு பின் திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் காதலை பேசியது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2: ஒரு காவியமான காதல் திரைப்படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்து விட்டு அதற்கு அடுத்ததாக, 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக கேரக்டரில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
செக்ஸ் பற்றி அறிவு தேவை: இந்த 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக 'Made For Each Other' கதையில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குறித்து நடித்திருந்தார். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு மிருணாள் தாகூர் மீது செல்லமாக கோவட்டு கருத்துக்களை பகிர்ந்தனர். இதையடுத்து பேட்டி, அளித்த அவர் தற்போதைய சூழலில் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம் என்றார்.
அடுத்தடுத்த படத்தில்: நடிகை மிருணாள் தாகூர், சில நாட்களுக்கு முன் வெளியான 'ஹாய் நானா' என்ற படத்திலும் நடித்திருக்கிறார், இதில் இவர் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது. மேலும் ஹாய் நான்னா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜூம் பண்ணி பாக்காதீங்க: நடிகை மிருணாள் தாகூர் கணிசமான படத்தை கைவசம் வைத்து இருக்கும் போதும், இணையத்தில் ஹாட் பேபியாக வலம் வருகிறார். தற்போது இவர், முன்னழகை தெரியும் படி இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் ப்ளீஸ் யாரும் ஜூம் பண்ணி பாக்காதீங்க என்றும், சீதா ராமம் பட நடிகையா இப்படி என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











