நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை.. உண்மையை உடைத்த ஜீவா பட நடிகை!

சென்னை: நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்று நடிகை அனுயா பகவத் தெரிவித்துள்ளார்.

நடிகை அனுயா அறிமுகமானது என்னமோ இந்தி படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

siva manasula sakthi heroine Anuya Bhagwat instagram video trending on social media

அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி: அனுயா பகவத் பல படங்களில் நடித்திருந்தாலும், சிவா மனசுல சக்தி படம் தான் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. ஜீவா, சந்தானம் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை எம் ராஜேஷ் இயக்கி இருந்தார். இளைஞர்கள் கவர்ந்த இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

வீடியோ சர்ச்சை: இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனுயா பகவத்தின் நிர்வாண படங்கள், வீடியோக்களை பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. ஆனாலும், அவ்வப்போது இவர் குறித்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இணையத்தில் வீடியோ: இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுயா பகவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு தமிழ் குறைவாக தான் தெரியும், பிறந்தது வளர்ந்தது அனைத்தும் துபாயில் தான். துபாயில் இன்ஜினியரிங் முடித்த பிறகு நடிப்பை பயின்று நடிக்க வந்தேன்.

யாருடனும் ரிலேஷன்ஷிப் இல்லை: சோஷியல் மீடியாவில் என்னை பற்றி பல வதந்திகள் உலா வருகிறது. அதாவது, சக நடிகர்களான விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி நான் யாருடனும் உறவில் இல்லை. இந்திய பிரதமரான நரேந்திர மோடி எப்படி சிங்கிளோ அதேபோலதான் தானும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என வீடியோவில் பேசி இருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஏன் சிங்கிளா இருக்கீங்க என்று கேட்க, நான் இன்னும் இந்த உலகத்தில் நல்ல ஆம்பளையே பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X