நமக்கு சோறு முக்கியம் பாஸ்... மீண்டும் நிரூபித்த குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி
கொச்சி : குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
Recommended Video
இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த புகழை அடுத்து தற்போது டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார் ஷிவாங்கி.

கோமாளி ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவருக்கு நல்ல குரல் வளம் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கோமாளியாக இவர் செய்த சேட்டைகளே இவருக்கு அதிமான புகழை பெற்றுத் தந்துள்ளது.

பிரபலமான கோமாளித்தனங்கள்
குக் அஸ்வினுடன் இணைந்து கடந்த சீசனில் இவரது கோமாளித்தனங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்ததாக துவங்கவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3யிலும் இவரது பங்களிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டான் படத்தில் முக்கிய கேரக்டர்
மேலும் இவரது நடிப்பில் சிவகார்த்திகேயனின் டான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார் ஷிவாங்கி. சமூக வலைதளங்களிலும் இவருக்கு ஏராளமான பாலோயர்கள் காணப்படுகின்றனர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.

கேரள சத்யா விருந்து
இந்நிலையில் பொங்கலையொட்டி தற்போது கேரளாவின் சத்யா விருந்தை தன்னுடைய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பப்படம், ஓலன், தோரன், கிச்சடி, பச்சடி என்று களைகட்டிய விருந்தை அவர் சுவைத்துள்ளார். மேலும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சுவைப்பட கூறியுள்ளார்.

பல்வேறு தளங்களில் சிறப்பு
நடிகை, பின்னணி பாடகி உள்ளிட்டவற்றுடன் தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார் ஷிவாங்கி. மற்றவர்கள் இயக்கத்தில் இவரது ஆல்பங்களும் வெற்றிப் பெற்று வருகின்றன. பல்வேறு தளங்களில் சிறப்பாக செயலாற்றி வருகிறார் இந்த கோமாளி.


Click it and Unblock the Notifications











