பிரியங்கா மோகன் குறித்த ஸ்வீட் அப்டேட்... மேடையில் சொன்ன ஷிவாங்கி!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, எஸ்ஜே சூர்யா, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். இந்தப் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது.

டான் படம்

டான் படம்

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. இதையடுத்து நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் இந்த ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காமெடியை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது இந்த ட்ரெயிலர் மூலம் தெரிகிறது.

நடிகையாக அறிமுகம்

நடிகையாக அறிமுகம்

ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் டிவி புகழ் ஷிவாங்கி தான் நடிகையாக மாற, சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று தெரிவித்தார். இந்தப் படத்தின் மூலம் அவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

பிரியங்கா குறித்த அப்டேட்

பிரியங்கா குறித்த அப்டேட்

தொடர்ந்து அவர் படக்குழுவினர் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். இதனிடையே படத்தின் நாயகி பிரியங்கா மோகன் குறித்து பேசிய ஷிவாங்கி, அவர் மிகவும் ஸ்வீட் என்றும் சூட்டிங்கில் அவர் அனைவருக்கும் நட்ஸ் மற்றும் டேட்ஸ் உள்ளிட்டவற்றை தருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கோமாளி ஷிவாங்கி

கோமாளி ஷிவாங்கி

நடிகையாக மாறியுள்ள ஷிவாங்கி முன்னதாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பல கெட்டப்புகளை போட்டவர். தற்போதும் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் கோமாளியாக பங்கேற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X