எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்.. டான் நடிகை சிவாங்கியின் ஆசை என்ன தெரியுமா?

சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுத்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே சிவாங்கிக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சிவாங்கியும் ஒரு சாட் செஷன் வைத்தார்.

அதில் உங்களுக்கு வரப் போற கணவர் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீங்க எனக் கேட்ட ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சிவாங்கி அளித்த பதில் டிரெண்டாகி வருகிறது.

சிரிக்க வைக்கும் கோமாளி

சிரிக்க வைக்கும் கோமாளி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி விஜய் டிவியின் பாப்புலரான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். கடந்த சீசனின்ல் சிவாங்கிக்கும் அஸ்வினுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர அந்த சீசன் மிகப்பெரிய ஹிட்டும் அடித்தது.

ஜாலி டைப்

ஜாலி டைப்

அப்பா அம்மா இருவருமே இசைக் கலைஞர்கள் விஜய் டிவி செட்டில் எந்தளவுக்கு ஜாலியாக இருக்கிறாரோ ரியல் லைஃப்பிலும் அந்த அளவுக்கு ஜாலியான டைப் தான் சிவாங்கி. ட்ரோல் பண்றாங்களே, திட்டுறாங்களே, கிரிஞ்ச்னு சொல்றாங்களேன்னு ரசிகர்கள் கேள்வி கேட்டாலும், அது அவங்க விருப்பம் சொல்லிட்டு போகட்டும், நாம நம்ம பொழப்பை பார்ப்போம் பாஸுன்னு செம கேஷுவலாக சொல்லிவிட்டு சிரிக்கிறார் சிவாங்கி.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சிவாங்கி. விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய் டிவியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பலரையும் தனது படங்களில் அறிமுகம் செய்து வைத்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு சிவாங்கியின் சேட்டைகள் பிடித்துப் போகவே டான் படத்தில் அவருக்கு சூப்பரான ரோல் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்கின்றனர்.

எப்படிப்பட்ட ஹஸ்பன்ட்

எப்படிப்பட்ட ஹஸ்பன்ட்

இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் லைவ் சாட் செய்த சிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும், அவருக்கு என்ன மாதிரியான குவாலிட்டிஸ் இருக்க வேண்டும் என நினைக்கிறீங்க என்கிற கேள்வியை எழுப்ப,"மனசளவுல ரொம்ப அழகா இருக்கணும்னு" செம க்யூட்டா பதில் சொல்லி இருக்கிறார் சிவாங்கி. ஏகப்பட்ட ரசிகர்கள், நாங்களும் மனசளவுல அழகு தான்னு புரபோஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X