அந்த ஹீரோ டைரக்டராகும்போது அதுல நடிக்கணும்... கல்யாணிக்கு இப்படியொரு ஆசை !
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் படம் மூலம் தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன், இந்தி நடிகர் அபய் தியோல், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கியுள் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஸ் தயாரித்துள்ளார். படம், நாளை வெளியாகிறது.

கல்யாணி பிரியதர்ஷன்
இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், கல்யாணி பிரியதர்ஷன். இவர், இயக்குனர் பிரியதர்ஷன் - லிஸி தம்பதியரின் மகள். தெலுங்கில் ஹலோ, சித்ராலஹரி, ரணரங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் மரைக்கார் படத்தில் நடித்து வருகிறார்.

நான் அப்படியல்ல
ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது பற்றி கல்யாணி கூறும்போது, இதில் மீரா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட கேரக்டர். எதையும் செய்யும் முன் பலமுறை யோசித்து செய்பவள். நிஜ வாழ்வில் நான் அப்படியல்ல, அதற்கு நேரெதிரானவள்.

கல்வி முறை
துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன். இந்தப் படம், நமது கல்வி முறையை பற்றிப் பேசுகிறது. நான் இங்கும் வெளிநாட்டிலும் படித்தவள். இரண்டு இடங்களிலும் கல்வி கற்றுத்தரப்படும் முறையை அறிந்தவள். அந்த வகையில் ஹீரோ, இன்றைய கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக இருக்கும் என்றார்.

திறமையான இயக்குனர்
சிவகார்த்திகேயன் பற்றி கூறும்போது, நல்ல மனிதர். படப்பிடிப்பில் ஒவ்வொருவரையும் அன்பாகப் பார்த்து கொள்வார். சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். என்றார்.


Click it and Unblock the Notifications











