கூட நடிச்சவங்கனுகூட பார்க்கல.. ஸ்ரீலீலாவுக்கு இப்படி சிவகார்த்திகேயன் பல்பு கொடுத்துட்டாரே பாஸ்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பராசக்தி. சில நாட்களுக்கு முன்பு வெளியான அதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். இதுதான் ஸ்ரீலீலாவுக்கு முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வராவிட்டாலும்; சுமார் ஹிட் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீலீலாவுக்கு சிவகார்த்திகேயன் பல்பு கொடுத்தது ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
சூர்யாவை வைத்து இயக்கவிருந்த புறநானூறு கதையை; அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து பராசக்தி என்ற பெயரில் இயக்கினார் சுதா கொங்கரா. இதில் எஸ்கேவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது சிவாவுக்கு 25ஆவது படம் என்பதும், ஜிவி பிரகாஷுக்கு நூறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் இருந்தது.

ரிலீஸான படம்: முக்கியமாக படத்தின் கதைக்களம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர்களின் போராட்டம் பற்றியது. இதுவும் எதிர்பார்ப்பை பற்ற வைக்க ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதுபோன்ற கதைக்களம் கொண்ட படங்களை சென்சார் குழுவினர் ஒரு வழி செய்துவிடுவார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக மொத்தம் 25 இடங்களில் கட் மற்றும் மியூட்டை சொன்னது சென்சார் குழு. அத்தனையையும் ஏற்றுக்கொண்டு பத்தாம் தேதி படம் ரிலீஸானது.
சுமார் வரவேற்பு: படத்தின் கதை உணர்வுப்பூர்வமான ஒன்று என்றாலும்; சினிமாவுக்கு தேவையான பல விஷயங்களை சேர்த்து போரே அடிக்காத வகையில் படத்தை கொடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர். அதற்கான முயற்சிகளையும் அவர் படத்தில் எடுத்திருந்ததை பார்க்க முடிந்ததுதான். ஆனாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆக; ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். அதேசமயம் எடுத்தவரைக்கும் இயக்குநர் நன்றாகவே எடுத்திருக்கிறார்; கடந்த கால வரலாறை தெரிந்துகொள்ள இப்படம் பெரிய வாய்ப்பு என்றும் கொண்டாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வசூலில் சூப்பர்: விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை படம் பெற்றிருக்கிறது. அதேசமயம் வசூலில் சக்கைப்போடு போட்டுவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது. அந்த அறிவிப்புபடி படமானது இரண்டே நாட்களில் மொத்தம் 51 கோடி ரூபாய் வசூல் அள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். நிச்சயம் நூறு கோடி ரூபாய் வசூலை எடுக்கும் எனவும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அவர்கள்.
ஸ்ரீலீலாவுக்கு கொடுத்த பல்பு: இந்நிலையில் படம் ரிலீஸாகி எதிர்பார்த்த ரிசல்ட் ஓரளவுக்கு கிடைத்துவிட்டதை அடுத்து படக்குழுவினர் பேட்டி ஒன்று கொடுத்தார்கள். அதில் சிவா, ஸ்ரீலீலா, சுதா கொங்கரா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது ஸ்ரீலீலா தனது கையில் இருந்த வாட்சை காட்டி இது Custom என்று சொல்ல; ஏன் கையிலிருந்து கழற்றுவது கஷ்டமா என டைமிங்கில் அடித்தார் சிவகார்த்திகேயன். இதை பார்த்த ரசிகர்களோ இங்கேயே இந்த பாடு படுத்துகிறாரே; ஷூட்டிங்கில் எவ்வளவு டைமிங் காமெடியை போட்டு ஸ்ரீலீலாவை திணற வைத்தாரோ என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











