Mr.லோக்கல்.. தர லோக்கலாக கலக்கும் சிவகார்த்திக்கேயன்!
சிவகார்த்திக்கேயனின் புதிய படத்திற்கு மிஸ்டர்.லோக்கல் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு Mr.லோக்கல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
தனது அதிரடி காமெடி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என தனது ஒவ்வொரு படங்களிலுமே காமெடியால் மக்களின் வயிறுகளைப் புண்ணாக்கியவர்.

இவரது இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து, இப்படத்தில் சிவாவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இதுவரை எஸ்கே 13 என்று அழைக்கப்பட்ட இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Mr.லோக்கல் எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டூடியோ கிரீன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டரில் நாற்காலி ஒன்றில் ஒரு காலைத் தூக்கி குத்துக்காலிட்டு வித்தியாசமாக அமர்ந்திருக்கிறார் சிவா. கையில் ஒரு டீ கிளாஸ் இருக்கிறது. அவரது உடைக்கும் அவரது நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் வித்தியாசமாக இருக்கிறது இந்தப் படம்.
இந்த போஸ்டர் மற்றும் படத்தலைப்பால் சிவா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மரண மாஸ், அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி என இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











