“சிவப்பு மஞ்சள் பச்சை“ பட நடிகை திடீர் திருமணம்… வாழ்த்தும் திரைப்பிரபலங்கள் !

சென்னை : சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமணம் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புதுமண தம்பதிகளுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள நடிகை

மலையாள நடிகை

மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ் முதன்முறையாக 2016ம் ஆண்டு மகேஷின்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து, கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன் மற்றும் ஹனி பீ 2.5 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவப்பு மஞ்சள் பச்சை

சிவப்பு மஞ்சள் பச்சை

2019 ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருந்தார் லிஜோமோல் ஜோஸ். அக்கா, தம்பி பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவான தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜோமோல் ஜோஸ் என இரண்டு கதாநாயகிகள் நடித்தனர்.

முக்கிய ரோலில்

முக்கிய ரோலில்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நவம்பர் 2-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இதில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில், நடிகை லிஜோமோல் ஜோஸ், அருண் ஆண்டனி என்பவரை திடீரென்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் அக்டோபர் 4ந் தேதி கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X