இவ்ளோ அழகா இருந்தா... தூக்கிட்டு போயி தான்... ஸ்ம்ருதி வெங்கட்டை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
சென்னை : இளம் நடிகைகளில் ரசிகர்களால் அதிக அளவில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ம்ருதி வெங்கட்.
தடம் வெற்றியைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மனில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டது.
இப்பொழுது ஜெய்க்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் ரெட்டை ஜடையில் அழகு ததும்ப வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகான மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

இரட்டை வேடத்தில்
இன்று நேற்று நாளை மற்றும் மௌன வலை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி வந்த நடிகை ஸ்ம்ருதி வெங்கட் - க்கு தடம் அறிமுகப் படமாக அமைந்தது . தடம் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்க அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.

மூக்குத்தி அம்மனில்
சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதன் பிறகு ஹீரோ மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வரும் ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மனில் பொறுப்புள்ள தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் விருப்ப நடிகையாக மாறிப் போனார் . மூக்குத்தி அம்மனுக்கு பிறகு எக்கச்சக்கமான படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

பகையே காத்திரு
இந்த வகையில் கார்த்திக் நரேன் தனுஷ் முதல்முறையாக இணைந்து பணியாற்றி வரும் D43 ல் முக்கிய வேடத்தில் நடித்து வர அதேசமயம் ஜெய்யின் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். மற்றும் பகையே காத்திரு என்ற மற்றுமொரு திரைப்படத்திலும் கைவசம் நடித்து வருகிறார்.

தூக்கிட்டு போயி கல்யாணம்
இதுவரையிலும் கிளாமருக்கு நோ நோ சொல்லி குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அனைவரும் ரசிக்கக்கூடிய துளிகூட கிளாமர் இல்லாத புகைப்படங்களை பதிவிட்டு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அந்த வகையில் ரெட்டை ஜடையில் அழகு ததும்ப பல்வேறு க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்ளோ அழகா இருந்தா... தூக்கிட்டு போயி தான் கல்யாணம் பண்ணனும் என மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











