சைடு ரோஸ் வைத்து இளசுகளை நைஸ் பண்ணும் தடம் நடிகை!
சென்னை : அசுரன், கர்ணன் என தொடர் வெற்றிகளுக்கு பிறகு தனுஷின் 43வது திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இதில் முக்கியமான வேடத்தில் நடித்து ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்.
தடம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நற்பெயரை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கதாநாயகி, குணச்சித்திர வேடங்கள் என கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு லைம் லைட் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது சைட் ரோஸ் வைத்து இளசுகளை நைஸ் பண்ணும் க்யூட் படத்தை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

இரண்டு கதாநாயகிகளில்
நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் இரட்டை வேடத்தில் பட்டையைக் கிளப்பிய தடம் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஸ்ம்ருதி நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.

தங்கை வேடத்தில்
அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட ஸ்ம்ருதி அதைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் தங்கை வேடத்தில் நடித்து அதிலும் செமையாக ஸ்கோர் செய்திருந்தார். நடித்த சில திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

தனுஷ் 43
தற்போது கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் தனுஷ் 43 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் தீர்ப்புகள் விற்கப்படும், நடிகர் ஜெய் நடித்து வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் என்ன ஹீரோயின் வாய்ப்புகளும் இவருக்கு குவிந்து வருகிறது.

செம க்யூட்
இந்த நிலையில் ஸ்ம்ருதி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. அதில் காதில் ஒரே ஒரு ரோஜாவை மட்டும் சொருகிக்கொண்டு கன்னத்தில் கைவைத்து சிரித்தபடி செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை இளசுகள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











