SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், தாறுமாறான விருந்தை பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் திருமண விழாவில் பங்கேற்றனர்.
திருமண விழாவில் ஏகப்பட்ட வேலையை இழுத்துப் போட்டுச் செய்த இயக்குநர் அட்லீ அதிதி ஷங்கர் மற்றும் ரன்வீர் சிங்குடன் இணைந்து போட்ட குத்தாட்ட வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ஷங்கர் மகள் திருமண விழாவில் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஹீரோயின் அனுயாவும் பங்கேற்றுள்ளார். அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.
சிவா மனசுல சக்தி ஹீரோயின்: மஹேக் எனும் இந்தி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான அனுயா 2009ம் ஆண்டு ஜீவா, சந்தானம் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் ரொமாண்டிக் காமெடி படமான சிவா மனசுல சக்தி படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில், அந்த படம் ரீ ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில்: மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுறம், என அடுத்தடுத்து சரியான படங்களை தேர்வு செய்யாமல் நடிக்க ஆரம்பித்த அனுயாவுக்கு கோலிவுட்டில் மார்க்கெட் அப்படியே சரிந்து போய் விட்டது. ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானாவின் அக்கா கதாபாத்திரத்தில் அனுயா நடித்திருப்பார். அதன் பின்னர் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் நடித்த அவர் தமிழ் சினிமாவை விட்டே கிளம்பிச் சென்று விட்டார்.
பிக் பாஸ்: இந்தி டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த அனுயா கடந்த 2017ம் ஆண்டு மீண்டும் தமிழில் பட வாய்ப்புகளை பிடிக்க பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பெரிதாக ஸ்பேஸ் கிடைக்காத நிலையில், கோலிவுட்டுக்கு மொத்தமாகவே குட்பை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்தி சீரியல்களில் கூட நடிக்காமல் இருந்து வந்த அனுயா தற்போது ஷங்கர் மகள் திருமணத்திற்கு வந்துள்ளார்.
ஷங்கர் மகள் திருமணத்தில்: 2018ல் கடைசியாக சவ்தான் இந்தியா எனும் டிவி சீரியலில் நடித்த அனுயா அதன் பின்னர் மீடியா வெளிச்சமே இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுயா வெளியிட்டுள்ளார். உடல் எடை சற்றே அதிகரித்து இருந்தாலும், அதே பப்ளினஸ் உடன் அவர் இருப்பதை பார்த்த ரசிகர்கள் சிவா மனசுல சக்தி 2 படத்துலையும் நீங்களே நடிக்க வாங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











