»   »  வீசி அடிக்கும் சினேகா!

வீசி அடிக்கும் சினேகா!

Subscribe to Oneindia Tamil

சினேகாவுக்கு புன்னகை இளவரசி என்று தெரியாத்தனமாக பெயர் வைத்து விட்டார்கள். நிஜ சினேகா அதற்கு நேருக்கு மாறானவராம். கோபம்வந்தால் கொந்தளித்து குமுறி விடுவாராம்.

நாக் ரவி எபிசோடுக்குப் பிறகு சினேகாவின் திரையுலக வாழ்க்கை அம்புட்டுதான் என்று பலரும் கட்டியம் கூறினார்கள். ஆனால் அம்மணியோபுத்தெழுச்சியுடன் படு வேகமாக கலக்கி வருகிறார்.

கடந்த வருடம் தெலுங்கில் வெளியான மகாரதி சினேகாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்து விட்டது. இதனால் தெலுங்கில் சினேகாவுக்கு புதுகிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்போது தமிழில் நடித்து வரும் பள்ளிக்கூடம் படமும் அவர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கோகிலா டீச்சர் (பள்ளிக்கூடம் படத்தில் இது சினேகாவின் கேரக்டர் பெயர்) என்றுதான் பலரும் இப்போது சினேகாவை கூப்பிடஆரமபித்திருக்கிறார்களாம். படு ஜாலியாக பள்ளிக்கூடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சினேகாவை கூப்பிட்டு உட்கார வைத்து கடலைபோட்டோம்.

கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பேசுங்களேன் டீச்சர் என்று நாம் கேட்டபோது, பகபகவென சிரித்த அவர் சரி சாப்பாட்டிலிருந்து ஆரம்பிப்போம்என்று சமையலுக்குத் தாவினார்.

எனக்கு ரொம்பப் பிடித்த சாப்பாடு நம்ம ஊர் இட்லி, தோசைக்குப் பிறகு சைனீஸ் வெரைட்டிதான். குறிப்பாக நூடூல்ஸைக் கையில் கொடுத்துவிட்டால் அப்படியே போட்டு விழுங்கி விடுவேன். அப்புறம், அம்மா சமைக்கும் எந்த சாப்பாடும் எனக்குப் பிடிக்கும்.

முன்பெல்லாம் சிக்கனை ஒரு பிடி பிடிப்பேன். ஆனால் இப்போதோ சுத்த வெஜிட்டேரியனாக மாறி விட்டேன். அதனால்தான் முன்பை விடகூடுதல் பொலிவோடு இருக்கிறேன் (அத நாங்கல்ல சொல்லணும்!)

விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். செஸ்தான் ரொம்பப் பிடிச்ச விளையாட்டு ( சில நடிகைகளுக்கு வேற விளையாட்டுதான் ரொம்பப்பிடிக்குமாம்ல!) அப்புறம் பேட்மிண்டனும் பிடிக்கும். டைம் கிடைச்சா, கூட விளையாட ஆள் கிடைச்சா புகுந்து விளையாடிடுவேன்.

சரி வீட்டிலும் இப்படித்தான் சிரிச்ச மூஞ்சியாவே இருப்பீங்களா?

நல்ல வேளை நீங்க எங்க வீட்டுப் பக்கம் வந்ததில்லை. எனக்கு மகா கோபம் வரும். எனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்தா, கண்ணில் பட்டாஅவ்வளவுதான் கையில் இருப்பதை தூக்கி எறிந்து ரகளை பண்ணி விடுவேன். சட்டுன்னு கோபம் வந்துடும். இதுவரைக்கும் எத்தனைசெல்போனை தூக்கிப் போட்டு உடைச்சிருக்கேன் தெரியுமா? (நாக் ரவி எபிசோடின்போது மட்டும் எத்தனைக்கா??)

சேலைதான் உங்களுக்கு ரொம்ப பாந்தமா இருக்கு, இல்லை?

எல்லோரும் அப்படி சொல்றாங்க. ஆனா எனக்குப் பிடிச்சது ஜீன்ஸ்தான். அட்டகாசமாக இருக்கும். அது எனக்கு வசதியாகவும் இருக்கு. அதனால்முடிஞ்சவரை ஜீன்ஸ் போடவே விரும்புவேன்.

பள்ளிக்கூடம் முடிஞ்சதும்?

படத்தை சொல்றீங்களா? நிறைய ஆஃபர் வருதுப்பா. நல்ல வாய்ப்பை மட்டும் ஏத்துக்கலாம்னு இருக்கேன். முதலில் பள்ளிக்கூடம் முடியட்டும்.அப்புறம் பார்க்கலாம் என்று துருதுருவென பேசினார் சினேகா.

சினேகா சிரிப்புக்குத்தான் காசே!

Read more about: very angry sneha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil