»   »  சிடு சிடு ஸ்னேகா

சிடு சிடு ஸ்னேகா

Subscribe to Oneindia Tamil

அழகு ஸ்னேகா ஒரு கேள்வியைக் கேட்டால் மட்டும் சிடு சிடு ஸ்னேகாவாகிவிடுகிறாராம்.

கடந்த ஆண்டின் ஆரம்பம் ஸ்னேகாவுக்கு படு குழப்பமாக அமைந்தது. ஸ்ரீகாந்த்துடன்இருந்த காதல் கட் ஆகிப் போனதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மலேசியவாலிபர் நாக் ரவியுடன் ஸ்னேகாவுக்குக் காதல், கல்யாணம் என அடுத்தடுத்துகுண்டுகள் வந்து விழ, ஸ்னேகா அதை மறுக்க ஒரே களேபரமாகிப் போனது.

அதிலிருந்து மீண்ட ஸ்னேகா, புதுப்பேட்டை மூலம் மீண்டும் லைம் லைட்டுக்குவந்தார். போன வருஷத்தை சந்தோஷமாகவே முடித்தார். இந்த ஆண்டு நிறையப்படங்களில் நடிக்க உறுதி பூண்டுள்ள ஸ்னேகா, நல்ல கதையம்சம் உள்ள படங்களாகப்பார்த்து புக் ஆகி வருகிறார்.

தமிழில் பள்ளிக்கூடம் படத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டர் தனக்கு பெயர் வாங்கித்தரும் என்பதால் படு சிரத்தையாக ஹோம் ஒர்க் செய்து வருகிறாராம். படு ஜாலியாகவருஷத்தை ஆரம்பித்திருக்கும் ஸ்னேகா, தன்னைத் தேடி வருவோரிடம் எப்போதுமேபடு ஜாலியாக பேசுவது வழக்கம்.

ஆனால் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டால்தான் சிடுசிடு ஆகி விடுகிறாராம். சமீபத்தில்புத்தாண்டையொட்டி தனக்கு நெருக்கமான தோழர், தோழியருக்கு விருந்துகொடுத்தார் ஸ்னேகா.

அப்போது ஒரு ஏடாகூட நிருபர், எல்லாஞ்சரி, எப்ப கல்யாண விருந்து என்றுநெல்லைத் தமிழில் லொள்ளை ஆரம்பித்துள்ளார். அதுவரை படு பளிச்செனசிரித்தபடி வளைய வந்த ஸ்னேகா, அப்படியே அப்செட் ஆகிப் போனார்.இருந்தாலும் அதை மறைத்தபடி, கேட்ட நிருபரிடம், என்னை பீல்டை விட்டே துரத்தமுடிவு செய்து விட்டீர்களா?

நிறையப் படங்களில் நடித்து, விருதுகள் வாங்கி, சாதனைகள் செய்து, இப்படிஎவ்வளவோ பாக்கி இருக்கு. ஒரு தமிழ்ப் பெண் முன்னுக்கு வருவதில் உங்களுக்குசந்தோஷம் இல்லை அப்படித்தானே.?

நானே நிறைய பிரச்சனைகளில் சிக்கி மீண்டு வந்துள்ளேன். இப்போதுதான் மறுபடியும்உற்சாகமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுக்குள் எதுக்கு கல்யாணம்?

கல்யாணம் செய்வதாக இருந்தால் நிச்சயம் உங்களிடம் சொல்கிறேன், கவலையேபடாதீங்க, ஒரு பத்து வருஷம் வெயிட் பண்ணுங்க என்று பன்ச் கொடுத்து விட்டுநகர்ந்தாராம்.

ஏண்டா கேட்டோம் என்று தனக்குத்தானே நொந்து கொண்ட அந்த நிருபர், வாயில்நூடுல்ஸை கொஞ்சமாக திணித்தபடி அப்படியே நகர்ந்து போனாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil