»   »  பிருந்தா மீது ஸ்னேகா பாய்ச்சல்

பிருந்தா மீது ஸ்னேகா பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்னேகாவுக்கும் சர்ச்சைகளுக்கும் ரொம்ப நெருக்கம். முதலில் அவரை காதலிக்கிறார்..இவரை காதலிக்கிறார் என்று கூட நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து கிசுகிசு.

பின்னர் சிங்கப்பூர் காதலரான நாக்ரவி விவகாரம், அவரை வெட்டிவிட்ட அவசரம்.

பின்னர் ஜவுளிக்கடை அதிபரின் மகனுடன் இவரை இணைத்து ஏடாகூடா நியூஸ்..

இந் நிலையில் தான் ஸ்னேகாவின் முன்னாள் அண்ணி டான்ஸ் மாஸ்டர் கலாவின்தங்கை பிருந்தா ஸ்னேகாவை வாரிவிட்டார்.

ஸ்னேகாவுக்கு ஆடவே தெரியாது. நடிகைகளிலேயே படு மோசமாக டான்ஸ் ஆடுவதுஅவர் தான். நன்றாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் கூட அவரிடம் இல்லை என்றுபிருந்தா கருத்து தெரிவிக்க இப்போது அதற்கு கடும் கோபத்தில் பதில் தந்துள்ளார்ஸ்னேகா.

நடிகைகளிலேயே சிம்ரன் தான் மிக நல்ல டான்ஸர் என்று கூறிய பிருந்தா, த்ரிஷா,ஜோதிகா, ஆசின், நயனதாரா, விஜய் ஆகியோரை பாராட்டிவிட்டு ஸ்னேகாவைப்போட்டுத் தாக்கினார்.

இது குறித்து ஸ்னேகா கூறுகையில்,

எனக்கா ஆடத் தெரியாது?. நான் நன்றாக ஆடுவதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். என் முதல் படத்திலேயேமிக நன்றாக ஆடியவள் நான். முதல் படமான விரும்புகிறேனில் நான் வைத்த ஸ்டெப்சைப் பார்த்து ரொம்பநல்லா ஆட்றீங்க என்று டான்ஸ் மாஸ்டர் தினேஷ் என்னை பாராட்டினார்.

மேலும் போஸ் படத்தில் நான் ஆடிய பொம்மலாட்டத்தை எல்லோரும் பாராட்டினார்கள்.

எனக்கு ஆடத் தெரியாது என்று பிருந்தா கூறியுள்ளதில் உள்நோக்கம் இருக்கிறது. வேண்டுமென்றே குறைகூறியிருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். நான் எப்படி ஆடுகிறேன் என்று அவர்களிடம்கேட்டால் சொல்வார்கள்.

என்னவளே படத்துக்குப் பின் பிருந்தாவுடன் சேர்ந்து பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.அவருடன் மேடை நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

இதனால் தான் அவர் என்னைக் குறை கூறியிருக்கிறார். அவர் இப்படிச் சொன்னதால் எனக்கு எந்த பாதிப்பும்இல்லை. எனக்கு பட வாய்ப்புக்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனால் பிருந்தாவின்பேச்சு குறித்து எனக்கு கவலையில்லை என்றார் ஸ்னேகா படு கோபத்துடன்.

பிருந்தா-ஸ்னேகா மோதலின் பின்னணியில் அவர்களது குடும்ப விவகாரம் இருப்பது தெளிவாகத் தெரிகிது.

பிருந்தாவின் அக்காவான டான்ஸ் மாஸ்டர் கலா, ஸ்னேகாவின் அண்ணன்கோவிந்தராஜனைத் திருமணம் செய்தவர். பின்னர் பிரிந்துவிட்டார். இருவருக்கும்விவகாரத்தும் ஆகிவிட்டது.

கலாவின் உதவியால் தான் ஸ்னேகா சினிமாவுக்கே வந்தார். துபாயில் வசித்து வந்தஸ்னேகாவை, ஒரு தமிழ் பத்திரிக்கை நடத்திய போட்டியில் பங்கேற்க வைத்துஅவரை சினிமாவுக்குக் கொண்டு வந்ததில் கலாவுக்கு பெரும் பங்கு உண்டு.

ஆனால், விவகாரத்துக்குப் பின் கலா குடும்பத்துக்கும் ஸ்னேகா குடும்பத்துக்கும்இடையே முட்டிக் கொண்டுவிட்டது.

இந்த பின்னணியில் தான் இந்த டான்ஸ் மோதல் எழுந்துள்ளது.

இதற்கிடையே ஸ்னேகாவுக்கு கன்னடத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.முருங்கைக்காய் பாக்யராஜின் இது நம்ம ஆளு படம் இப்போது கன்னடத்துக்குப்போகிறது.

இதில் நடிக்கப் போவது ரீ-மேக் ராஜா ரவிச்சந்திரன். இதில் ஷோபான கேரக்டரில் ஸ்னேகா நடிக்கப் போகிறார்.படத்தின் பெயர் பிராமணா. இதில் பிராமணப் பெண் வேடத்தில் ஸ்னேகா பிச்சு உதறப் போகிறார்.

இது தவிர மலையாளத்திலும் ஸ்னேகாவுக்கு வாய்ப்புக்கள் வந்தவண்ணமே உள்ளன. ஆனால், தமிழ் தான்அவரை ஒதுக்க ஆரம்பித்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil