»   »  ஸ்னேகாவின் புது பிசினஸ்!

ஸ்னேகாவின் புது பிசினஸ்!

Subscribe to Oneindia Tamil

முன்பு செல்போன் டீலர்ஷிப் எடுத்திருந்த ஸ்னேகா இப்போது அதை மூட்டை கட்டி வைத்து விட்டு புது பிசினஸில் இறங்கிவிட்டாராம்.

புன்னகை இளவரசி என்று சிலாகிக்கப்படும் ஸ்னேகாவுக்கு, கோலிவுட்டில் தினந்தோறும் வந்து குதிக்கும் சுந்தரிகளால், நம்எத்தனை காலம் வண்டி ஓடுமோ என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்கும் வேலைகளில்படு வேகமாக இறங்கியுள்ளார்.

அதற்கான பல ஐடியாக்களை அவருக்கு வழங்கி வருபவர் யார் தெரியுமா? சமீப காலமாக ஸ்னேகாவுடன் நெருக்கமாகியுள்ளஆக்ஷன் கிங் நடிகர்தானாம்.

இந்த நெருக்கம் காரணமாக ஸ்னேகாவின் மனதில் முதலில் இடம் பிடித்த ஸ்ரீ நடிகருக்கும், ஸ்னேகாவுக்கும் இடையே நட்பில்விரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். இருவரும் இப்போது பேசிக் கொள்வது கூட இல்லையாம்.

சரி, மேட்டருக்கு வருவோம். சம்பாதித்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்று ஆக்ஷன் கிங், ஸ்னேகாவுக்கு ஐடியாகொடுத்துள்ளார். தான் சென்னை அருகே கிருகம்பாக்கத்தில் வாங்கிப் போட்டுள்ள இடத்தில் பெரிய மலர்த் தோட்டம்வைத்திருப்பது குறித்து கூறிய நடிகர், அதை பின்னாளில் பிளாட் போட்டு விற்றால் பெரிய தொகை கைக்குக் கிடைக்கும் என்றும்கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ஸ்னேகாவுக்கு இது நல்லாருக்கே, பேசாமல் ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கி விடலாம் போல இருக்கே என்றுகூறியுள்ளார்.

யோசிக்காதீங்க, உடனே செய்யுங்க என்று கூறியதோடு நிறுத்தாத ஆக்ஷன், வளசரவாக்கம் பகுதியில் சில ஏக்கர் நிலம் இருப்பதாககூறி அதை ஸ்னேகா வாங்கவும் உதவினாராம்.


அத்தோடு நில்லாமல், அதில் சில பிளாட்டுகளை தானே வாங்கி முதல் போணியைச் செய்து ஸ்னேகாவின் பிஸினஸைதொடங்கியும் வைத்தாராம். வாங்கிய பிளாட்டுகளுக்கு காசையும் கரெக்டாக ஸ்னேகா கையில் திணித்துவிட்டார்.

ஏற்கனவே ஸ்னேகாவை தனது அடுத்த படத்திலும் புக் செய்துவைத்து விட்ட ஆக்ஷன் நடிகர், இப்போது தனது ஆலோசனைப்படிஸ்னேகாவை செயல்பட வைக்க ஆரம்பித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆக்ஷன் நடிகரின் உதவிகளுக்கு கைமாறாகவே அவருடன் நடித்து வரும் படத்தில் கவர்ச்சியை அள்ளித் தந்து அசத்திக்கொண்டிருக்கிறார் ஸ்னேகா.

(ஸ்னேகாவை எடுப்பாகக் காட்டும் வகையில் உடைகளை டிசைன் செய்து தரும் வேலையை கவனிக்க ஆரம்பித்திருப்பதுஅவரது அக்கா சங்கீதா தான்.)

பெண்கள் விஷயத்தில், ஆக்ஷன் நடிகரின் அசகாய சூர வேலைகள் கோலிவுட்டில் பிரசித்தம் என்பதால் அய்யோ பாவம் ஸ்னேகாஎன்றும் சிலர் உச் கொட்டுகிறார்களாம்.

தேவுடா, தேவுடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil