»   »  துறு துறு, ஜாலி, கிளாமர்!

துறு துறு, ஜாலி, கிளாமர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினேகா பேச ஆரம்பித்தால் படு ஸ்பீடு. அவரை வாயாடின்னுதான் தோஸ்து வட்டாரம்செல்லமாக கூப்பிடுமாம். உட்கார்ந்து பேசினால் அதை கன்பார்ம் பண்ணுகிறார்சினேக்.

நாக் ரவி தொல்லையிலிருந்து விடுபட்டு இப்போது படு சந்தோஷமாக இருக்கும்சினேகா, கை நிறையப் படங்களுடன் கலகலப்பாக இருக்கிறார்.

ஒரு பக்கம் படங்கள், மறுபக்கம் ஏகப்பட்ட விளம்பரம் என இரு துறைகளிலும் படுபிசி இந்த புன்னகை இளவரசி. எதிரிகளையும் அடங்க வைத்து விடும் மந்தகாசபுன்னகையுடன், இந்தக் கால மோனலிசாவாக இருக்கும் சினேகாவுடன் ஒரு சிக்பேட்டி.

புளியைப் போட்டுத் துடைத்து வைத்த குத்து விளக்காக புடவை, ஜாக்கெட்டில்சினிமாவில் பார்க்கும் சினேகாவுக்கும், வீட்டில் இருக்கும் சினேகாவுக்கும் ஏகப்பட்டவித்தியாசங்கள் இருக்குமாம். அந்த அளவுக்கு அம்மணி படு ஜாலியான, துறுதுறுவான பொண்ணாம்.

ஷார்ட்ஸ், டீ சர்ட் சகிதம் வீட்டில் சினேகாவைப் பார்க்கும் யாருக்குமே இதுசினேகாவா என்று சந்தேகம் வராமல் போகாது அந்த அளவுக்கு ஜாலியாகஇருப்பாராம்.

சினிமாவுக்கு கிளாமர் அவசியம்தாங்க. அதை நான் மறுக்கவே மாட்டேன். அழகானபொண்ணுன்னா கொஞ்சம் கிளாமரா இருந்தாத்தான் பார்க்க பளிச்சுன்னு இருக்கும் (!).ஆனால் கிளாமர் மட்டுமே தேவைன்னு சொல்ல மாட்டேன்.

கிளாமர் ரொம்ப நாளைக்கு நிற்காது. ரசிகர்களின் மனசுக்குள் உட்கார்ந்து மாய்மாலம்செய்யனும்னா அம்சமா, அழகா, அப்சரஸ் போன்ற தோற்றம் தான் சரி. ஊர்வசி,ரம்பை, மேனகை மேட்டர் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் எடுபடும்.

அரை குறை ஆடையிலும் கிளாமர் காட்டலாம். வெறும் சிரிப்பு மூலமும் சிதறவைக்கலாம். புடவையில் இல்லாத கிளாமரா.? எனக்கு புடவையிலும் படபடக்கமுடியும், மாட்ரன் டிரஸ்ஸிலும் சிறகடிக்க முடியும். ரெண்டுமே எனக்கு பொருந்தும்.

ஆனால் புடவைக்குத்தான் எனது முதல் ஓட்டு! என்று பொறிந்து தள்ளுகிறார் சினேகா.

வருடத்திற்கு 6 படம் நடிக்க சினேகா முடிவு செய்துள்ளாராம். அது தெலுங்காகஇருந்தாலும் சரி, தமிழாக இருந்தாலும் சரி. மொத்தத்தில் 6 படமாம்.

ஏன் இந்த மெளனம் , பிரம்மனா (கன்னடம்) ஆகிய படங்களில் இப்போது நடித்துவருகிறாராம் சினேகா. இரண்டிலுமே அவருக்கு படு திருப்தியான ரோல்களாம்.பின்னி எடுத்து வருகிறாராம்.

இதில் பிரம்மனா படம் வேறு எதுவும் இல்லை, தமிழில் ஒரு காலத்தில் கலக்கிய இதுநம்ம ஆளு படத்தின் ரீமேக்தான். தமிழில் ஷோபனா நடித்த மாமி வேடத்தை,கன்னடத்தில் சினேகா செய்கிறார். சும்மா சொல்லக் கூடாது, மாமி வேடத்தில்மந்தாரமாக இருக்கிறாராம் சினேகா.

கல்யாண மண்டபம் கட்டியாச்சு, மாப்பிள்ளை பார்த்தாச்சா என்று கேட்டால், ப்ப்சுஎன்று உதட்டைப் பிதுக்கி மறுக்கிறார். அதெல்லாம் அம்மா, அப்பா வேலை. நம்மவேலை நடிச்சமா, ஜாலியா இருந்தோமா என்று கண்கள் அலை பாய கலாய்க்கிறார்.

கண்ணிலேயே கலங்கடிக்கிறாரேய்யா!

Read more about: sneha defends glamour roles

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil