»   »  இந்தியில் ஸ்னேகா

இந்தியில் ஸ்னேகா

Subscribe to Oneindia Tamil
தமிழ், தெலுங்கில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத நிலையில், ஸ்னேகாவைத்தேடி 2 புதிய படங்கள் வந்துள்ளன.

நல்ல நடிகை, நல்ல டான்ஸர் என்று பெயர் பெற்ற ஸ்னேகா தமிழிலும் தெலுங்கிலும்குட்டியாக ஒரு ரவுண்டு அடித்து விட்டார்.

இடையில் நாக்ரவியால் ஏற்பட்ட சிக்கலால் துவண்டு போயிருந்த ஸ்னேகாவுக்குபுதுப்பேட்டை புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.

தாசி வேடத்தில் கிளப்பியிருக்கிறீர்கள் என்று பலரும் பாராட்டியவண்ணம்உள்ளனராம். ஆனால் நல்ல நல்ல வேடம் பூண்டு அசத்திய ஸ்னேகா இப்படிப்பட்டரோலில் நடிப்பதா என்று சிலர் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

பாராட்டையும், விமர்சனத்தையும் வழக்கம் போல தனது அழகிய புன்னகையால்எதிர்கொண்டு வரும் ஸ்னேகாவிடம் இப்போது தெலுங்கில் ஒரு படமு, கன்னடத்தில்ஒரு படமும் தான் உள்ளன.

தமிழில் புதிய படங்கள் எதுவும் வரவில்லையாம். இந்த நிலையில் இந்தியிலிருந்துஇரண்டு புதிய பட வாய்ப்புகள வந்துள்ளன.

புதுப்பேட்டையில் ஸ்னேகாவின் நடிப்பைப் பார்த்த இந்திப் பட இயக்குனர் ராஜ்குமார்சந்தோஷி ஸ்னேகாவைத் தொடர்பு கொண்டு பாராட்டித் தள்ளிவிட்டாராம்.

அத்தோடு தனது புதிய படத்தில் நடிக்க வருமாறும் அழைப்பும் விடுத்துள்ளார்.சந்தோஷமான ஸ்னேகா கதையைக் கேட்டுள்ளார். சுருக்கமாக கதையைக் கூறியசந்தோஷியிடம், நடிக்க ரெடி என்று வாக்கு தந்துவிட்டார்.

மற்ற நடிகர்களை முடிவு செய்து விட்டு மறுபடியும் தொடர்பு கொள்கிறேன் என்றுகூறியுள்ளாராம் சந்தோஷி.

இதேபோல உதயகாந்த் என்ற இந்திப் பட இயக்குனரும் ஸ்னேகாவை தனது படத்தில்நடிக்க வைக்க அணுகியுள்ளாராம். அடுத்தடுத்து இந்திப் பட வாய்ப்புகள்வந்துள்ளதால் குஷி பிறந்துள்ளது ஸ்னேகாவுக்கு.

எனது நடிப்புத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்று புளகாங்கிதமடைந்துபேசுகிறார் சினேகா. தெலுங்குப் படங்களில் கிளாமருக்குத்தான் முதலிடம்கொடுப்பார்கள். தமிழில் ஹீரோக்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்.

இந்தியில் கிளாமர் தூக்கலாக இருந்தாலும் எனக்கு சந்தோஷி சொன்ன கதையில்ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இதனால் நடிக்க சம்மதித்துவிட்டேன்.அதேசமயம், இந்தியில் அளவான கிளாமரில்தான் நடிப்பேன். எல்லையைத் தாண்டமாட்டேன் என்கிறார் ஸ்னேகா.

தமிழ், தெலுங்கு தெரியும், இந்தியில் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டால், எனக்குஇந்தியும் நன்றாகப் பேசத் தெரியும் என்று ஒரு போடு போட்டார் ஸ்னேகா.

டீக் ஹை.. டீக் ஹை பேட்டி (இது நமக்கு தெரிஞ்ச இந்தி)

Read more about: sneha goes to act in hindi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil