ஹீரோயின்
கார் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஸ்னேகா தற்போது நன்கு குணமாகிவிட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
"ஏப்ரல் மாதத்தில்" படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து காரில் இவர் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தபோதுரேணிகுண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி ஸ்னேகா படுகாயமடைந்தார்.
இதையடுத்து ஸ்னேகா சென்னை அருகே உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஸ்னேகாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் அவருக்கு காலிலும் முதுகிலும் எலும்பு முறிவுஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு அசையவே கூடாது என்றும் கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்னேகாவின் உடல் நிலைதற்போது முழுவதுமாகத் தேறிவிட்டது.
கடந்த நான்கு நாட்களாக அவர் படுக்கையிலிருந்து எழுந்து நடை பயின்று கொண்டிருக்கிறார். எந்தவிதஆபரேஷனும் செய்யாமலேயே அவர் விரைவில் குணமடைந்து வருகிறார்.
இன்னும் ஒன்றரை மாதம் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்னேகாவுக்கு ஆலோசனை கூறியமருத்துவர்கள், நேற்று அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
தற்போது அமைதியாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் ஸ்னேகா வரும் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு தான்படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











