For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்னேகா.. ஏன் இந்த மெளனம்?

  By Staff
  |
  எண்ணற்ற காதல் கதைகள் நாட்டில் கொட்டிக் கிடக்கையில், சுயநலமற்ற காதலை சொல்லும் படம்தான் ஏன்இந்த மெளனம்?. இது ஒரு டப்பிங படம்.

  இந்தப் படத்தில் ஸ்னேகா தான் ஹீரோயின். அவருக்கு ஜோடி விசில் பட நாயகனான விக்கிரமாதித்யா.இருவரும் இணைவது இதுமுதல்முறையல்ல. ஏற்கனவே சின்னா படத்தில் விக்கியும், ஸ்னேகாவும் சேர்ந்து ஒருபாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

  சின்னா படம் தான் ஸ்னேகா கிளாமருக்கு முழுமையாக மாறிய முதல் படம். ஆனால் படம் வெற்றிபெறவில்லை, ஸ்னேகாவின் கிளாமருக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.

  இதனால் இடையில் படங்கள் இல்லாமல் போன ஸ்னேகா புதுப்பேட்டைக்குப் பிறகு கை நிறைய திருப்திகரமானபட வாய்ப்புகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

  ஏன் இந்த மெளனம் படத்தின் கதையைக் கேட்டதும் நிச்சயம் நான் இதில் நடிப்பேன் என்று கூறி விட்டாராம்ஸ்னேகா. காதல் கோட்டை போல அழகான, சுத்தமான காதலை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

  படத்தில் நடிப்போடு ஸ்னேகாவை புதிய கிளாமர் பரிமாணத்தில் காட்டியுள்ளார்களாம். காரணம் இதுதெலுங்குப்படமாச்சே.. அங்கிருந்துதான் இப்போது தமிழுக்கு வருகிறது இந்தப் படம்.

  எனவே மென்மையான காதலைக் கூட படு வேகமாக காட்டுவது டோலிவுட்காரர்களின் இயல்பு. இந்தப்படத்திலும் அப்படிப்பட்ட வேகத்தைக் காண முடியும்.

  தமிழை விட ஸ்னேகா இப்போது தெலுங்கில்தான் ரொம்ப பிசியாக உள்ளார். அங்கு நுழையும்போதே எல்லாநாயகிகளும் கிளாமருக்குத் தாவி விடுவதால், ஸ்னேகா படு விவரமாக குடும்பப் பெண்களை கவரும்வகையிலான வித்தியாசமான வேடங்களை தேடித் தேடி நடித்து வருகிறார்.

  கூடமாட கிளாமரையும் சேர்த்துக் கொள்வதால் தெலுங்குப் பட தயாரிப்பாளர்களின் பிரியத்திற்குரியவராகவிளங்குகிறார்.

  கல்யாண மண்டபம் திறந்த ஸ்னேகா:

  தன் சொந்த ஊரான பண்ருட்டியில் டிஆர்வி நகரில் ஸ்னேகா மஹால் என்ற பெயரில் திருமண மண்டபம்கட்டியுள்ளார் ஸ்னேகா என்பது உங்களுக்குத் தெரியும்.

  விழுப்புரம் சரக டிஐஜி ராஜீவ் குமார் அதைத் திறந்து வைக்க, ஸ்னேகா குத்துவிளக்கு ஏற்றினார்.

  மண்டபத்தில் மூன்று ஜோடிகளுக்கு சீர்வரிகைளுடன் இலவச கல்யாணமும் செய்து வைத்து அசத்தினார்ஸ்னேகா. தனது தாய், தந்தையுடன் மேடையில் சுறுசுறுப்பாக வலம் வந்த ஸ்னேகா, செய்தியாளர்களிடம்பேசுகையில்,

  பிறந்தது பம்பாய், வளர்ந்தது துபாய் என்றாலும், எனது பாட்டிக்கு இதுதான் சொந்த ஊர். அதனால் தான் இங்குகல்யாண மண்டபம் கட்டியுள்ளேன். அக்டோபரில் தெலுங்கில் இரண்டு படங்களும், கன்னடத்தில் ஒரு படமும்வெளியாகிறது.

  தமிழில் நடிக்காததால், தீபாவளி ரிலீஸில் என் படம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும்என்று எனக்கும் ஆசை உண்டு. அது கனவாகவே இருக்கிறது. நிஜமானால் ரொம்ப சந்தோஷப்படுவேன்என்றார்.

  உங்களுக்கு எப்போ கல்யாணம் என்று கேட்டபோது, அழகான ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டுப்போனார் ஸ்னேகா.

  Read more about: snehas yen intha mounam
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X